கோவை, பிப். 16- ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க் கும் நாள் கூட்டத்தில் 60 ஓய்வூதி யர்களிடமிருந்து பணப்பயன்கள் வேண்டி கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 5மனுக்களுக்கு உட னடித் தீர்வு எடுக்க மாவட்ட வரு வாய் அலுவலர் ராமதுரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியதாரர் கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் இரா மதுரைமுருகன் தலைமையில் நடைபெற்றுது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஓய்வூதியதாரர்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததாவது, மாவட்ட வாரியாக பணியாற்றிய முன்னாள் பணியாளர்கள்/ஓய்வூ தியதார்களுக்கு அவர்களது கோரிக்கைகளாக நிலுவையி லுள்ள மருத்துவநலநிதி, குடும்ப நலநிதி, பணப்பலன்கள் குறித்து கணக்கெடுத்து உடனடியாக சம் பந்தப்பட்ட ஓய்வூதியதாரரிடம் வழங்கிடும் நோக்கில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத் தப்பட்டு வருகின்றது. கோவை மாவட்டத்தில் வரு வாய்த்துறை, கல்வித்துறை, வளர்ச்சித்துறை போன்ற பல் வேறு அரசுத்துறைகளில் பணி யாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதா ரர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாக மூன்று மாதத் திற்கு ஒருமுறை ஓய்வூதியதா ரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகின்றது. அதனடிப்ப டையில் கடந்த முறை நடத்தப் ப்பட்ட ஓய்வூதியர் குறைதீர்க் கும் கூட்டத்தில் பல்வேறு துறை களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 75 ஓய்வூதியதாரர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு,70நபர் களுக்கு தீர்வளிக்கப்பட்டுள்ளது. 5 நபர்களுக்கு கூடுதல் விவரங்கள் கோரி சம்பந்தப்பட்ட துறைக்கும், ஓய்வூதியர்களுக்கும் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அது போலவே, இம்முகாமிலும், 60 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அவற்றில் 5மனுக்களின் மீது உடனடித்தீர்வு வழங்கப்பட்டுள் ளது. மீதமுள்ள விண்ணப்பங்க ளுக்கு துரித நடவடிக்கை எடுக் கும்படி பிரிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதியர் நலப்பிரி வில் பணியாற்றும் அலுவலர்கள் இன்றைய அலுவலர்கள் நாளைய ஓய்வூதியர்கள் என்ற எண்ணத் தின் அடிப்படையில் கனிவுடன் பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன், என மாவட்ட வருவாய் அலுவலர் ராம துரைமுருகன் தெரிவித்தார். முன்னதாக இந்நிகழ்வில் ஓய் வூதிய இயக்க இணை இயக்குநர் இளங்கோவன், துணை இயக்கு நர் மதிவாணன், மாவட்ட கரு வூல அலுவலர் ராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுஜாதா உட்பட அரசு அலுவலர் கள் பலர் கலந்து கொண்டனர்.