கோவை, ஜன.26- கிராம சபைக் கூட்டத்தில், குடியுரி மைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மான நிறைவேற்ற கோரி வாலி பர் சங்கத்தினர் சார்பில் மனு அளிக்கப் பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து , மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சி லர், ஊராட்சி தலைவர், ஊராட்சி குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் கிராம சபைக் கூட்டமாகும். இந்நிலையில், நீலாம்பூர் வெங்கிட் டாபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில், வாலிபர் சங்கத்தின் சார்பில் குடியுரிமைச் சட்டத் திருத்தம் அமலாக்கப்பட் டதற்கு எதிராக தீர்மானம் நிறை வேற்ற மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்தும் மத்திய அரசையும், இந்த சட்டத்தை ஆதரித்து அமல்ப டுத்த உள்ள தமிழக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், வெங்கிட்டாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அரசுக்கு எதிராக எந்த ஒரு தீர்மானங்களையும் நிறைவேற்ற மாட்டோம் என தெரிவித்து மனுவை பெற மறுத்தார். இதனால் வாலிபர் சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடு பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் வாலிபர் சங்கத்தின் சூலூர் தாலுகா செயலாளர் பாலகிருஷ்ணன், தாலுகா நிர்வாகி நாகர்ஜுனன் உள்ளிட்ட எராளமானோர் கலந்து கொண்டனர்.