tamilnadu

img

ஓய்வூதியர்களுக்கான சலுகைகளை முழுமையாக வழங்குக

சேலம், டிச.17-  ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை அரசு முழுமையாக வழங்க வேண்டுமென செவ்வாயன்று ஓய்வூதியர் உரிமை நாள் விழாவில் அனைத்து சங்க ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சங்க ஓய்வூதியர் கூட்ட மைப்பு சார்பில் ஓய்வூதியர் உரிமை நாள் விழா நடைபெற்றது.இதில்,மத்திய,மாநில அரசுத் துறை களின் கீழ் பணியாற்றி ஓய்வுப் பெற்றோர் பங்கேற்றனர். தமிழ் நாடு அனைத்து துறை  ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சேவை. அங்கப்பன் தலைமை தாங்கினார்.  ஆர்.சுப்பிரமணியம் வரவேற்றார். இதில் ஓய்வுபெற்ற அனைத்து ஓய்வூதியர்களுக்கும் அரசு வழங்க வேண்டிய பணப் பலன்களை முழு மையாக வழங்கிட வேண்டும். மருத் துவ படிகள் உள்ளிட்ட அடிப் படைத் தேவைகளுக்கு கூடுதலாக கவனத்தில் கொண்டு அரசு செயல் பட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.  ஓய்வூதிய  உரிமை நாளை வாழ்த்தி மாவட்ட கூடுதல் கருவூல அலுவலர் மேனகா பேசினார். இந்நிகழ்ச்சியில், சங்கத்தின் மாநில தலைவர் சுகுமாரன், பள்ளிக் கல்வித்துறை மாநில நிர்வாகி நாட் ராயன், சந்திரபாபுலு, எல்ஐசி பென் சனர் சங்கத்தின் செயலாளர் டி.சேஷ கிரி, ஓய்வு பெற்ற மின் ஊழியர் அமைப்பு சார்பில் அன்பழகன், ஓய் வுபெற்ற போக்குவரத்து சங்கத்தின் சார்பில் பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தருமபுரி 

ஓய்வூதியர் உரிமைநாளை முன் னிட்டு தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் தருமபுரி செங் குந்தர் மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் எஸ்.பழனிச்சாமி தலை மை வகித்தார்.மாவட்டச்செய லாளர் ஜி.பி.விஜயன் வரவேற்றார். மாநிலபொதுச்செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி, அரசு போக்கு வரத்து ஓய்வூதியர் நல அமைப்பு மாநில இணைச்செயலாளர் கே. குப்புசாமி, மின்வாரிய ஓய்வூதியர்  நல அமைப்பு மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி,  அஞ்சல் ஓய்வூ தியர் சங்க மாவட்டத்தலைவர் ஆர்.நடராஜன், ஓய்வுபெற்ற ஆசிரியர் அமைப்பு தலைவர் நாகைபாலு ஆகி யோர் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் வாழ்த்தி பேசினார். மாவட்டப்பொருளாளர் எம்.முனுசாமி நன்றி கூறினார்.