tamilnadu

img

காலமுறை ஊதியம் வழங்குக

உடுமலை, ஜூலை 16- காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சார்பில் செவ்வாயன்று உடு மலை, குடிமங்கலம், மடத்துக் குளம், அவிநாசி பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய  அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வை தமிழக அரசு வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங் களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும்.   சட்டப்படியான ஓய்வூதியம் ரூபாய்  3,500 வழங்க வேண்டும். பல ஆண்டுகள் பதவி உயர்வு வழங் காமல் இருக்கும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை வேறு துறை வேலைகளில்  ஈடுபடுத்த கூடாது. பணிக் கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக, உடுமலை பார்க்  அருகில் உள்ள ஐசிடிஎஸ்  அலுவ லகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்  மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின்  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் வட்டகிளை தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாவட்ட செய லாளர் எல்லம்மாள், சிஐடியு மாவட்டத்துணை செயலாளர்  எஸ்.ஜெகதீசன், அரசு ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.பால சுப்பிரமணியம், சித்ராதேவி, பூங்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர்.     

குடிமங்கலம்

குடிமங்கலம் ஒன்றியத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவ லகத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் சாந்தி தலைமை தாங்கி னார்.  சிஐடியு சங்கத்தின் தலைவர்  வெ.ரங்கநாதன், அங்கன்வாடி சங்கத்தின் பொன்.லீலாள், ராணி,  காளீஸ்வரி, அரசு ஊழியர் சங்கத் தின் சண்முகசுந்தரம், ஓய்வூதியர் சங்கத்தின் ஜெயபிரகாஷ், வாலிபர் சங்கத்தின் ஓம்பிரகாஷ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். ்

மடத்துக்குளம் 

இதேபோல் மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு  கன்னிதாய் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வெண்ணிலா, அரசு ஊழியர் சங்க செயலாளர் முருக சாமி, சிஐடியு சங்கத்தின் ஆா்.வி. வடிவேல் மற்றும் தெய்வலட்சுமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.  

அவிநாசி

அவிநாசி வட்டாட்சியர் அலுவ லகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு  சங்க வட்டாரத் தலைவர் பொ.வளர்மதி தலைமை வகித்தார். நிர்வாகிகள் என்.சரஸ்வதி, ஆ. நதியா, பொ.சுகன்யா, பி.செல்வி, டி. சுசீலா ஆகியோர் முன்னிலை வகித் தனர். வட்டார செயலாளர் ரா. இந்திராணி, அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை செயலாளர் ஆர்.கருப்பன், மாவட்ட பொருளாளர் கோ.தனலட்சுமி ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். முடிவில் துணைத் தலைவர் பானுப்பிரியா நன்றி கூறி னார்.