சேலம், மே 31- அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வலியு றுத்தி தொடர்ந்து 6 வது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து செவி லியர்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவப் பணிகள் தேர்வா ணையம் (எம்.ஆர்.பி) மூலம் தமிழக அரசால் நேரடியாக தேர்வு செய்யப் பட்டு ஒப்பந்த முறையில் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனை கள், மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு செவிலி யர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தி தொடர்ந்து ஆறாவது நாளாக தமிழகம் முழுவ துமுள்ள ஒப்பந்த செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகு தியாக சேலத்திலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் கோரிக்கை அட்டை அணிந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட் டனர். இதுகுறித்து தமிழ்நாடு எம். ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் நிர்வாகி மேரி தெரிவிக் கையில், தமிழக அரசு எங்களின் நியாயமான கோரிக்கையை நிறை வேற்ற வேண்டும். இதற்கு அரசு செவிசாய்க்காவிடில் அடுத்தகட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவ தும் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணா விரத போராட்டம் விரைவில் அறி விக்கப்படும் என்றார். மேலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் சூழலில், செவிலியர் களின் உயிர்காக்கும் தன்னலமற்ற சேவையை கருத்தில் கொண்டு எங் கள் வாழ்வாதாரம் மேம்பட அனை வருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.