திருவள்ளூர், நவ.2- 36 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர்க ளுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட மாநாடு சனிக்கிழமையன்று (நவ.2) திருவள்ளுரில் மாவட்டத் தலைவர் எஸ்.லதா தலைமையில் நடை பெற்றது. தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இ.மணிகண்டன் மாநாட்டை துவக்கிவைத்து பேசினார். மாவட்டச் செய லாளர் ஆர்.லட்சுமி வேலை அறிக்கையை வாசித்தார். பொருளாளர் எஸ். உமாராணி வரவு- செலவு கணக்கை முன்வைத்தார். மாவட்ட பொருளாளர் இரா.பாண்டுரங்கன், அரசு ஊழியர் சங்கத்தின் மகளிர் குழு அமைப்பாளர் ஜி.வெண்ணிலா, அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பா.சித்ரசெல்வி, சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.ராஜேந்திரன், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இ.சந்திரசேகர், முன்னாள் தலைவர் கோ. இளங்கோவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி நிறைவுரையாற்றி னார். ஆர்.ஜெயந்தி நன்றி கூறினார். அங்கன்வாடி திட்டத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் முறையை ரத்து செய்ய வேண்டும், குறைந்த பட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ. 9ஆயிரம், ஓய்வு பெறும் போது ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், உதவியாளருக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக எஸ்.லதா, செயலாளராக ஆர்.லட்சுமி, பொருளாள ராக எஸ்.உமாராணி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.