districts

img

ஊழியர், உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குக அங்கன்வாடி விழுப்புரம் மாவட்ட மாநாடு கோரிக்கை

விழுப்புரம்,ஆக.14- தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் 4 ஆவது விழுப்புரம்,கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட மாநாடு விழுப்புரத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஆர். பிரேமா தலைமை தாங்கி னார். முன்னதாக மாவட்டப் பொருளாளர் ஆர். ராமதிலகம் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ஆர். மலர்விழி வேலை அறிக் கையை சமர்ப்பித்தார். சிஐடியு மாவட்ட தலை வர் எஸ்.முத்துக்குமரன், மாவட்டச் செயலாளர் ஆர். மூர்த்தி, மாவட்டப் பொரு ளாளர் வி.பால கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் டி.டெய்சி நிறை வுறையாற்றினார்.  அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி  காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும், முறை யான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்,  பணிக்கொடை யாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்க ளுக்கு ரூ. 5 லட்சமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். இந்த மாநாட்டில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டாக பிரிக்கப் பட்டது.  விழுப்புரம் மாவட்டத் தலைவராக ஆர்.ராமதிலகம், மாவட்டச் செய லாளராக ஆர்.மலர்விழி மாவட்டப் பொருளாளராக எஸ். புனிதா ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவராக எம். கொளஞ்சி அம்மாள், மாவட்டச் செயலாளராக ஆர்.பிரேமா, பொருளாள ராக ஏ.ஜெயந்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்த னர்.