ஈரோடு,செப்.13- கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்ட ஊழியர்களுக்கு ஊதிய சமத்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ஈரோட்டில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்ட ஊழியர்களுக்கு ஊதிய சமத்துவம் வழங்க வேண்டும். தபால் ஊழியர்களுக்கு உயர் ஊதிய விகிதத்தில் நிலுவை தொகையினை காலதாமதமின்றி வழங்க வேண்டும். எம்ஏசிபி பதவி உயர்வை 1.1.2006 ஆம் தேதி முதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று அகில இந் திய அஞ்சல் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங் கத்தின் சார்பில் ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு கோட்டத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் என்.ராமசாமி, மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட தலை வர் என்.மணிபாரதி ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி பேசினர். சங்கத்தின் நிர்வாகிகள் ஆர்.முருகேசன், வி.பழனி வேல், கே.பச்சையப்பன் உள்ளிட்ட ஏரா ளமானோர் பங்கேற்றனர்.