அவிநாசி, பிப். 25- தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியா ளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்றக் கோரி செவ்வா யன்று தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பினார். 41 மாத பணிநீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க கோரியும், நெடுஞ் சாலை பராமரிப்பு பணிகளை தனியா ருக்குத் தாரை வார்ப்பதைக் கைவிடக் கோரியும், பணிக்காலத்தில் உயிரி ழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங் கக் கோரியும் செவ்வாயன்று தமிழக முதல்வருக்கு நெடுஞ்சாலை பணியா ளர் சங்கத்தினர் கடிதம் அனுப்பினர். அவிநாசியில் நடைபெற்ற இந்நிகழ் வில் சங்கத்தின் நிர்வாகிகள் ராமன், கருப்பன், ராஜேந்திரன், முருகேசன், வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உடுமலை உடுலைப்பேட்டை வட்டக் கிளை சார்பாக நடைபெற்ற கடிதம் அனுப்பும் இயக்கத்திற்கு உட்கோட்ட தலைவர் கே.செல்லமுத்து தலைமை வகித்தார். இதில் மாநில தலைவர் மா.பாலசுப்பி ரமணியன், கோட்ட தலைவர் கே. வெங்கிடுசாமி உள்பட உட்கோட்ட நிர்வாகிகள் திரளாகக் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் சாலை பணியாளர் சங்க உட்கோட்ட பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட் தில் மாநில தலைவர் எம்.பாலசுப்பி ரமணியம், மாநில பொதுச்செயலாளர் ஆ.அம்சராஜ் ஆகியோர் சிறப்புரை யாற்றினார்.
உடுமலை
உடுலைப்பேட்டை வட்டக் கிளை சார்பாக நடைபெற்ற கடிதம் அனுப்பும் இயக்கத்திற்கு உட்கோட்ட தலைவர் கே.செல்லமுத்து தலைமை வகித்தார். இதில் மாநில தலைவர் மா.பாலசுப்பி ரமணியன், கோட்ட தலைவர் கே. வெங்கிடுசாமி உள்பட உட்கோட்ட நிர்வாகிகள் திரளாகக் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் சாலை பணியாளர் சங்க உட்கோட்ட பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட் தில் மாநில தலைவர் எம்.பாலசுப்பி ரமணியம், மாநில பொதுச்செயலாளர் ஆ.அம்சராஜ் ஆகியோர் சிறப்புரை யாற்றினார்.