tamilnadu

img

ஜெ.என்.யு தாக்குதல் : கோவை அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்த கும்பல் ஒன்று, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து கோவை அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்த கும்பல் ஒன்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் அப்பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் ஆயிஷ் கோஷ், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  இந்த தாக்குதலில் காயம் அடைந்த 18 பேர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து, ஜாமியா மில்லியா மற்றும் தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் தில்லி போலீஸ் தலைமையகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த சம்பவத்தை கண்டித்து, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில், இந்த தாக்குதலை கண்டித்து, கோவை அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.