கோவை, ஜூலை 23– கோவை ஜீவா நகரில் 30 ஆண்டுக ளுக்கு மேலாக வசித்து வரும் மக்களின் குடியிருப்புகளை இடிக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது தொடர் பாக எடுத்துரைத்ததைத் தொடர்ந்து இடிக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட் டது. கோவை - மேட்டுப்பாளையம் சாலை அருகே கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஜீவா நகரில் கடந்த 40 ஆண்டு களாக 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். கடந்த 1988-ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரி யம் ஜீவா நகர் பகுதியை தத்தெடுத்து ஓட்டு வீடுகள் கட்டுவதற்குக் கடன் வழங் கியுள்ளது. இந்த நிலத்திற்கான கிரையத் தொகை மற்றும் குத்தகை தவணை தொகைகளை கடந்த 30 ஆண்டுகளாக இம்மக்கள் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜீவா நகரில் உள்ள குடியிருப்புகள் அகற்றப்பட்டால் தங்க ளது நிலத்தின் மதிப்பு உயரும் என்கிற நோக்கில் அப்பகுதியைச் சுற்றி வசிக்கும் சிலர் மேற்குறிப்பிட்ட பகுதியை ஆக்கிர மிப்பு என்று தவறான தகவல்களுடன் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து தங்களுக்கு சாதகமான உத்தரவையும் பெற்றனர். இதனையடுத்து இப்பகுதியில் இருப்ப வர்களை காலி செய்யக்கோரி மாநகராட்சி மற்றும் நகரமைப்பு துறையினர் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். மேலும், எவ்வித அறிவிப்பும் இல்லாமல் பொக்லைன் இயந்திரத்தை கொண்டு வந்து வீடுகளை இடித்து வருகின்றனர். இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடு களை இடித்துள்ளனர். இம்மக்களின் ஒன் றுபட்ட போராட்டம் காரணமாக குடியி ருப்புகளை முழுவதும் இடிப்பதில் தாம தம் ஏற்பட்டது. இருப்பினும் அதிகாரிகள் மின் இணைப்புகளை துண்டிப்பது, குடிநீர் விநியோகத்தை நிறுத்துவது போன்ற நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், செவ்வாயன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் 5 பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் 15 வீடுகளை இடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரி களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் நிர்வாகி புருசோத்த மன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் மலரவன் உள்ளிட்ட 15 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதற்கி டையே, அப்பகுதி மக்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக் கினை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதற்கான நகலை பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளி டம் காட்டியதைத் தொடர்ந்து வீடுகளை இடிக்கும் பணியை மாநகராட்சி அதி காரிகள் நிறுத்தினர். இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை உடனடியாக மாநகராட்சி யின் செலவிலேயே அப்பகுதி குடியிருப்பு களுக்கு மின் இணைப்பு கொடுக்க வேண் டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.ஆறுச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி அஸ்ரப் அலி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சுசி.கலையரசன் உள்ளிட் டோர் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள் ளனர்.