tamilnadu

img

புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை திரும்பப்பெறு

கோவை, ஜூன் 25– மாணவர்களின் நலனுக்கு விரோதமான புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தி கோவையில் செவ்வாயன்று இந்திய மாண வர் சங்கத்தினர் நகல் எரிப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல் துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.  புதிய கல்வி கொள்கை வரைவு அறிக் கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மாநில கூட்டாட்சி முறைக்கு எதிரானதாகவும்,  இந்தி திணிப்பு, நீட்தேர்வு போன்ற தேர்வுகளை நடத்தி ஏழை எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்பை சீர்குலைக்கவும், குலக்கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது என கல்வியைக் காவிமயமாக்கும் மத்திய மோடி அரசின் நடவடிக்கையைக் கண்டித்து நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.  இதன் ஒருபகுதியாக கோவை அரசு  கலைக்கல்லூரி வாயில் முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தினேஷ் தலைமையில் நகல் எரிப்பு போராட்டம் நடத்த ஒன்று கூடினர். முன்ன தாக அங்கு காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து கல்லூரி வாயில் முன்பு கூடிய மாணவர்கள் புதிய கல்வி கொள்கை  எதிர்ப்பு பாதகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில் ஆர்ப்பாட்டம் நடந்து  கொண்டிருந்தபோதே காவல்துறையினர் வந்து மாணவர்களின் கைகளில் இருந்த நகல் அறிக்கையை பிடுங்க முயற் சித்தனர். இதனால் மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் நகலை எரிக்க முயன்றபோது அதனைத் தடுத்து வரைவு நகல் அறிக்கையை மாண வர்களிடம் இருந்து பறித்து காவல்துறை யினரே அதனைக் கிழித்து எறிந்தனர். இதனால் அரசு கல்லூரியின் முன்பு  சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.