districts

img

ஏழை மக்கள், விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு மின்சார சட்டத்திருத்த மசோதா நகல் எரிப்பு போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக. 8 -  ஒன்றிய மோடி அரசு ஆகஸ்ட் 8 அன்று மின்சார சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இச்சட்டம் அமலுக்கு வந்தால், தமிழ்நாட்டில் 21 லட்சம் விவசாய பம்புசெட்டுகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச  மின்சாரம் ரத்து செய்யப்படும். அதோடு வீடுகள், தறிகள், சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும்  இலவசம் மற்றும் மானிய விலை மின்சாரம் நிறுத்தப்படும்.  விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கும் விரோதமான மின்சார திருத்த மசோதாவை சட்டமாக்க கூடாது என்று ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழி லாளர் சங்கம் சார்பில் திங்கட்கிழமை தமிழ்நாடு முழுவதும் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.  திருச்சி ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத்தலை வர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்க ராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்ட செய லாளர் கார்த்திகேயன், மாவட்ட தலைவர் கே.சி.பாண்டி யன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தங்க துரை ஆகியோர் பேசினர். சிஐடியு ஒருங்கிணைப்பாளர் ரகுபதி, சாலை போக்கு வரத்து சங்க மாவட்ட துணைத்தலைவர் சுப்ரமணி, கட்டு மான சங்க சந்திரசேகர், ஆட்டோ சங்க மணிகண்டன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தஞ்சாவூர்
தஞ்சாவூர் ஆற்றுப் பாலம் அருகே நடைபெற்ற போராட் டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில் குமார், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன், வி.தொ.ச மாவட்டச் செயலாளர் கே.பக்கிரி சாமி, மாவட்டப் பொருளாளர் கே.அபிமன்னன், சிபிஎம் மாநகரச் செயலாளர் வடிவேலன், விவசாயிகள் சங்கம், முனியாண்டி, கே.அன்பு, ஞானமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  பூதலூர் நால்ரோட்டில் நடைபெற்ற போராட்டத்திற்கு, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமை வகித்தார். சமவெளி இயக்கம் சு.பழனிராஜன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் வின்சென்ட் ராஜா, பொரு ளாளர் அறிவழகன், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் கடைவீதி யில் நடைபெற்ற போராட்டத்தில், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வீ.கருப்பையா, தென்னை விவசாயிகள் சங்கம் ஆர்.எஸ். வேலுச்சாமி, விவசாயிகள் சங்கம் செய லாளர் செந்தில்குமார் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் நடை பெற்ற சட்ட நகல் எரிப்பு போராட்டத்திற்கு மாவட்டச் செய லாளர் எம்.சேகர் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் சாமிநாதன், நகரச் செயலாளர் கோபு, சிஐடியு பொறுப்பாளர் ராமச்சந்தி ரன், பி.நடராஜன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

மன்னார்குடி
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மன்னார்குடி  பெரியார் சிலை எதிரில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி தலைமை வகித்தார். காவல் துறையினர் தள்ளுமுள்ளு செய்தவாறே மாவட்டத் தலை வர் எஸ்.தம்புசாமியிடம் இருந்து மசோதா நகல்களை பறித்து தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சித்தனர். எனினும் ஆர்ப்பாட்டத்திற்கு இடையில் மசோதாவின் நகலை விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் தீயிட்டு கொளுத்தினர். இப்போராட்டத்தில் விவசாயிகள் சங்க  மாவட்ட துணைத் தலைவர் கே.சுப்ரமணியன், மன்னார்குடி  செயலாளர் ஜி.முத்துகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.ஜெயபால், சிஐடியு தலைவர்கள் ஜி.ரகுபதி, டி.ஜெக தீசன், ஏ.பி.தனுஷ்கோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்டம் தேவூர் கடைத்தெருவில் நடைபெற்ற நகல் எரிப்பு போராட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநில தலைவர் வி.சுப்ரமணியன் கலந்து  கொண்டார். கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் என்.எம்.அபுபக்கர், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்தையன், வி.ச. மாவட்டத் தலைவர் எம்.என்.அம்பி காபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை 
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் கீழ முக்கூட்டு பெரியார் சிலை முன்பு நகல் எரிப்பு போராட்டம்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. விவ சாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நடராஜன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், விவசாய சங்க மாவட்டத் தலைவர் டி.சிம்சன் உள்ளிட்டோர் சட்ட நகலை தீயிட்டு கொளுத்தி கண்டன முழக்கமிட்டனர்.

பணி புறக்கணிப்பு போராட்டம்
நாசகரமான மின்சார சட்ட திருத்த மசோதா 2022- ஐ கைவிடக் கோரி நாடு முழுவதும் அந்தந்த மாநிலங் களின் மின்துறை மற்றும் மின் வாரியங்களில் மின் உற்பத்தி நிலையங்கள், துணை மின் நிலையங்கள் மற்றும் பிரிவு அலுவலகங்கள் உள்பட அனைத்து அலுவல கங்களிலும் வேலை முடக்கப் போராட்டம் நடைபெற்றது.

மன்னார்குடி
மன்னார்குடி பூக்கொல்லை சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகம் முன்பு தொமுச கோட்ட செயலாளர்  சு.காளிதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மின்வாரிய பொறியாளர் சங்க தஞ்சை மண்டலச் செய லாளரும், அனைத்திந்திய மின் வாரிய பட்டயப் பொ றியாளர்கள் சம்மேளன தென் மண்டல தலைவருமான முனைவர் சா.சம்பத் விளக்கவுரையாற்றினார். பொறியா ளர் சங்க பொதுக்குழு உறுப்பினர் க.கண்ணன், சம்மேளன  திட்ட செயல் தலைவர் டி.ராஜாகோபால், மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோட்ட தலைவர் மோகனசுந்தரம் உள்ளிட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்
அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு  சார்பில் திங்கட்கிழமை தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளன ஏஐடியுசி மாநில துணைத் தலைவர் பொன்.தங்கவேல் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு  சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.ராஜாராமன், மாவட்ட செயலாளர் பி.காணிக்கைராஜ், தொழிலாளர் பொறி யாளர் ஐக்கிய சங்க மாவட்ட செயலாளர் ராகவன், பொறியா ளர் சங்க மாநில துணைத்தலைவர் சுந்தரராஜ், மாவட்ட செயலாளர் சுந்தர், பொறியாளர் கழக மாவட்டச் செய லாளர் மகாலிங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலாளர் பால.வெங்கடேஷ், அண்ணா தொழிற் சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன், ஜனதா தொழிலா ளர் சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன், ஏஐடியுசி மாவட்ட செய லாளர் தில்லைவனம், மாவட்ட துணை செயலாளர் துரை. மதிவாணன், சிஐடியு முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.மனோகரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெய பால், சுந்தரம் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

திருச்சிராப்பள்ளி
திருச்சி தென்னூர் மின்வாரிய தலைமை பொறியா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். பொறியாளர் கழக விக்ரமன், இன்ஜி னியர் சங்க நரசிம்மன், தொமுச பாலு, ஏடிபி அருள், பெட ரேசன் சிவசெல்வம், ஜக்கிய சங்க ராஜமாணிக்கம், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு செல்வராஜ், ஐஎன்டியுசி கருணாநிதி, தொழிலாளர் சம்மேளன பெரு மாள் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  இந்த காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்க ணக்கான தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.