தேசிய கல்வி கொள்கை 2020ஐ திரும்பப் பெறக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் மாவட்டச் செயலாளர் எஸ்.பார்த்திபன் தலைமையில் திண்டிவனத்தில் நடைபெற்றது. இதில் செயற்குழு உறுப்பினர்கள் சு.சிலம்பரசன், ஆ.கபிலன், கிளைச் செயலாளர் ஏ.ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் மைலம், செஞ்சி உட்பட 10க்கும் மேற்பட்ட மையங்களில் போராட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் மிட்டப்பள்ளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் தீபக், சிபிராஜ், தனுஷ், திருப்பதி, பிரசன்னா, பரத், பிரவின், விஷால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.