கோவை, ஆக. 6- இலங்கையைச் சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தலாளி அங் கொட லொக்கா வழக்கு விவகாரத்தில் இந்திய உளவு அமைப்பான ”ரா” புல னாய்வு அதிகாரிகள், சிபிசிஐடி அதி காரிகளிடம் ஆலோசனை மேற் கொண்டு விவரங்களை பெற்றுள்ள னர். இலங்கையைச் சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தலாளி அங் கொட லொக்கா கோவையில் உயிரி ழந்ததாக கூறப்படும் விவகாரத்தில், சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை கோவை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், வழக்கு சிபி சிஐடி- க்கு மாற்றப்பட்டு துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜூ தலை மையில் வழக்கை விசாரிக்க 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டது. இத னைத்தொடர்ந்து, கோவை காளப்பட் டியில் அங்கொட லொக்கா வசித்து வந் ததாக கூறப்படும் வீட்டில், சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண் டர். இதேபோல் திருப்பூர் மற்றும் மதுரையில் விசாரணை மேற்கொண்டு வரும் சிபிசிஐடி போலீசார் கடத்தலா ளியின் சர்வதேச தொடர்புகள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அங்கொட லொக்கா மரணம் தொடர்பாக இந்திய உளவு அமைப்பான “ரா” புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த 5 அதிகாரிகள் கோவையில் ஐஜி சங்கர் உள்ளிட்ட சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஆலோ சனை மேற்கொண்டு வழக்கு தொடர் பான விவரங்களை பெற்றுள்ளனர். மேலும், கோவையில் உயிரிழந்தது லொக்கா என்பதை உறுதி செய்ய உடற்கூராய்வின் போது உடலிலி ருந்து எடுக்கப்பட்ட இரைப்பை, சிறு குடல், கல்லீரல், சிறுநீரகம், இருதயம் ஆகிய உறுப்புகள் டிஎன்ஏ பரிசோத னைக்காக சென்னையில் உள்ள தடய வியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் கைது செய் யப்பட்ட வழக்கறிஞர் சிவகாமசுந்தரி யின் 7 வங்கி கணக்குகளுக்கு ரூ.50 லட் சம் முதல் ரூ.1 கோடி வரை பணப்பரி வர்த்தணை நடைபெற்றதும் தெரிய வந்துள்ளது. மேலும், சர்வதேச அமைப் பான இண்டர்போல், கடந்த 2019 ஆம் ஆண்டு அங்கொட லொக்காவை தேடப்பட்டு வரும் நபராக ரெட் நோட் டீஸ் பிறப்பித்து உள்ளது குறிப்பிடத் தக்கது.