tamilnadu

மத்திய சிறையில் காலிப்பணியிடம் - விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை, ஜூன் 1–கோவை மத்திய சிறையில் காலியாகஉள்ள சமையலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை மத்திய சிறையில் ஒரு சிப்ப எழுத்தர், நாவிதர், இரண்டு சமையலர், லாரி ஓட்டுனர், இரண்டு நெசவுப்பணியாளர் மற்றும்ஒரு பாய்லர் பயர்மேன் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் சிங்காநல்லூர் திறந்த வெளிச்சிறையில் ஒரு சமையலர், கட்டுப்பாடு கிளைச்சிறைகளில் 9துப்புரவு பணியாளர் மற்றும் 10 சமையலர்பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்குத் தகுதி வாய்ந்தஆண் நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பங்களை (செல்போன் எண் குறிப்பிட்டு) சான்றிதழ்களின் நகல்களுடன் கோவை மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு முகவரியிட்டு 2019 ஜூன் 10 ஆம்தேதிக்குள்  கோவைமத்திய சிறையில் கிடைக்கும் வகையில் அனுப்பிவைத்திட வேண்டும். தகுதியுள்ளவிண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் தேதிமற்றும் நேர விபரம் பின்னர் தெரிவிக்கப்படும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.