திருச்சிராப்பள்ளி, மார்ச் 25- மத்திய அரசு பணியாளர் தேர்வாணை யம் மூலம் 5,000க்கும் மேற்பட்ட பணிக்காலி யிடங்களுக்கு அறிவிப்பாணை வெளி யிட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 27 வயதிற்குட்பட்ட அனைத்து வேலைநாடும் இளைஞர்கள் www.ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் 27.3.2023 வரை விண்ணப்பிக்கலாம். தொலைதூரத்தில் வசிக்கும் வேலை நாடுநர்கள் பயன்பெறும் வகையில் பல் வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென் பாடக்குறிப்புகள், சமச்சீர் புத்தகங்களின் மென் நகல் முந்தைய ஆண்டு வினாத் தாள்கள், பயிற்சி வகுப்புகளின் காணொளி காட்சிகள் ஆகியவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேக மாக வடிவமைக்கப்பட்ட மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் (https://tamilnadu careerservices.tn.gov.in) உள்ளன. இதனை பதிவிறக்கம் செய்து பயனடை யுமாறும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த போட்டித்தேர்வுகளுக்கு தயாரா கும் வேலைநாடுநர்கள் இப்போட்டித் தேர்விற்கு விண்ணப்பிக்குமாறும் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்பட்டு வரும் எஸ்எஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப் பில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல் லது 0431-2413510, 94990-55901 ரூ 94990-55902 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.