districts

செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சிராப்பள்ளி, ஜன.13- திருச்சி மாவட்ட சுகாதாரச் சங்கம் மூலம் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 119 செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்புவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜனவரி 31 மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. செவிலியர் பட்டயபடிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம், தமிழ் இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் முடித்தவர்கள், 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் ரூ.18,000. விண்ணப்பங்களை நிர்வாக செயலாளர், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் முகம்மது கல்லூரி அருகில், டி.வி.எஸ்.டோல்கேட், திருச்சிராப்பள்ளி - 620 020 என்ற முகவரியில் நேரிலோ, விரைவுத்தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை அலுவலக பணி நாட்களில் திருச்சி துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2333112 என்ற  எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.