tamilnadu

img

கோவை தொழில்களை பாதுகாக்க முனைப்பு காட்டுவேன் தொழில் அமைப்புகள் பாராட்டு விழாவில் பி.ஆர்.நடராஜன் எம்.பி. பேச்சு

கோவை, ஜூன் 12 – தொழில்களை பாதுகாத்தால்தான் தொழிலாளிகளை பாதுகாக்க முடி யும் என்பதை உணர்ந்த தொழிற் சங் கவாதி என்பதால் கோவை தொழில்களை பாதுகாப்பதில் முனைப்பு காட்டு வேன் என தொழில் அமைப்புகளின் பாராட்டு விழாவில் பி.ஆர்.நடராஜன் எம்.பி. உரையாற்றினார்.  கோவை நாடாளுமன்ற தொகுதி யில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனுக்கு இந்திய தொழில் வர்த்தக சபை சார் பில் புதனன்று அவிநாசி சாலையில் உள்ள சேம்பரில் நடைபெற்ற பாராட்டுவிழா கூட்டத்திற்கு அமைப் பின் தலைவர் லஷ்மிநாராயணன்  தலைமை தாங்கினார். செயலாளர் பிரபு முன்னிலை வாகித்தார். இந் நிகழ்ச்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் அமைப்பின் நிர் வாகிகள் பங்கேற்று பி.ஆர்.நடரா ஜன் எம்.பி.க்கு சால்வை மற்றும்  பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக் களை தெரிவித்தனர்.  இதனைத்தொடர்ந்து  தலைவர் லஷ்மிநாராயணன் தலைமையேற்று உரையாற்றுகையில், பி.ஆர்.நடரா ஜன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் கோவைக்கு 11  புதிய ரயில்களை பெற்றுக் கொடுத் ததும், கோவை ரயில்நிலையத்தில் நிற்காமால் போத்தனூர் வழியாக கேரளா சென்ற ரயில்களை கோவை ரயில் நிலையத்தில் வந்து நிற் கவைத்தது, கோவை ரயில் நிலை யத்தை தரம் உயர்த்தியது உள்ளிட்ட பணிகளை நினைவு கூர்ந்தார். மேலும், தொழில் அமைப்புகள் சிறு, குறு தொழில்களுக்கு விதிக்கப் பட்டுள்ள அதிகபட்ச ஜிஎஸ்டி வரியை 5 சதவிகிதமாக மாற்றி அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பிய நிலையில், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச் சாரத்தில் நமது பிரச்சனைகளை முழுமையாக உணர்ந்த பி.ஆர்.நடரா ஜன், ஜாப் ஆர்டர்களுக்கு அறவே  ஜிஎஸ்டி வரிவிதிப்பு கூடாது. உற் பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு குறைந்தபட்ச ஜிஎஸ்டி வரியை நிர் ணயிக்க வேண்டும் என தேர்தல் பிரச்சாரத்தில் வலுவாக எடுத்துரைத் தார்.

தற்போது வெற்றி பெற்று கோவை நாடாளுமன்ற உறுப்பின ராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பி. ஆர்.நடராஜனுக்கு சேம்பர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கி றோம் என்றார். இதனையடுத்து அமைப்பின் நிர்வாகிகள் கோவை மாவட்டத்தின் வளர்ச்சிகான கோரிக்கை மனுவினை வழங்கினர்.  இதனையடுத்து ஏற்புரையாற்றிய பி.ஆர்.நடராஜன் எம்.பி. பேசுகை யில், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு கொள்கையால் சிறுகுறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது என்பதை முழுமையாக உணர்ந்ததாலே இந்த வரிவிதிப்பிற்கு எதிராக நாங்கள் போராடினோம். தொழிற்சங்கவாதி என்கிற முறையில் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று உங்களின் எதிர்புறம் நின்று நாங் கள் போராடுபவர்கள்தான். அதே நேரத்தில் பல்லாயிரக்காணக் கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் இந்த தொழில்கள் இருந்தால்தான் தொழிலாளிகளை பாதுகாக்க முடியும் என்பதை உணர்ந்தவர்கள் நாங்கள். ஆகவே, கோவை தொழில்களை பாதுகாக்க முனைப்போடு செயல் படுவோம். முன்னரே நாங்கள் சொன்னது போல ஜாப் ஆர்டர்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு அறவே கூடாது என்பதில் உறுதியோடு நின்று நாடாளுமன்றத்தில் அழுத்தமான குரலை எழுப்புவேன். வரிவிதிப்பு இல்லாமல் அரசை நடத்த முடியாது என்பதும் நாங்கள் அறிவோம். ஆகவே உற்பத்தி செய்யப்பட்டு முழுமையடைந்த பொருட்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஜிஎஸ்டி  வரிவிதிப்பு இருக்க வேண்டும்  என்பதை வலியுறுத்தி வருகிறோம். இதேபோல், கோவை மாவட்டத் தின் வளர்ச்சிக்காக வருகிற ஐந்தாண்டுகள் எனது நாடாளுமன்ற பணியை முழுமையாக பயன்படுத்து வேன். கோவை முதல் பெங்களூரு இரவு நேர ரயில், கோவை முதல் மதுரை ரயில் மற்றும் கோவை ரயில் நிலையத்தில் மூன்றாவது வழித் தடம் உள்ளிட்டவைகளுக்கு ரயில்வே அதிகாரிகளை சந்தித்து முறையிட்டுள்ளேன். தொடர்ந்து இக்கோரிக்கைகளை வென்றெடுக்க உழைப்பேன். விமான நிலைய விரி வாக்கம், மெட்ரோ ரயில் சேவை ஆகிய திட்டங்களுக்கு தொழில் துறையினரின் ஆலோசனையும், முழுமையான உதவியையும் பெற்று  மாவட்டத்தின் வளர்ச்சியில் முழுமை யான பங்கினை ஆற்றுவேன் என்று கூறினார்.