வங்கி ஊழியர் மாநாட்டில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
திருநெல்வேலி, செப்.30- பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்ய மத்திய பாஜக அரசு ரூ. 6 லட்சம் கோடிக்கு பட்டியலை தயார் செய்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். நெல்லையில் நடந்த இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநில மாநாட்டில் உரையாற்றிய மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியதாவது:- மக்களவைக் கூட்டம் துவங்கி யது முதலே தேசிய கல்விக் கொள்கை, என்ஐஏ போன்றவை ஒவ்வொன்றாக வந்தபோது இது மாநில உரிமைகளை பறிப்பது மட்டுமல்ல. மாநிலம் என்கிற அரசு கட்டமைப்பையே தகர்க்கும் செயல் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு தகுதியை நீக்கம் செய்யும் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு மாநிலத்தையே பறிக்கும் சட்டம் அது. இந்திய ஜனநாயகத்தின் மீதான இரக்கமற்ற தாக்குதலாகும்.
17ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நடந்த 37 நாட்களில் 32 மசோதாக்கள் தாக்கல் செய்யப் பட்டது. இது அனைவருக்கும் தெரி யும். ஆனால், எந்த பத்திரிகையிலும் வெளிவராத செய்தி முதல் முறை யாக இந்த 37 நாட்களிலும் ஒரு மணி நேரம்கூட மக்களவை ஒத்தி வைக்கப் படவில்லை என்பது. அப்படி ஒன்றும் எதிர்ப்பே இல்லாமல் இந்த கூட்டம் நடந்துவிடவில்லை. எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. நாடாளுமன்றத்தின் மாநிலங்கள வையில் காஷ்மீர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அரு கில் உள்ள மக்களவையில் இருந்த எங்களுக்கு அதன் நகல் தரப்பட வில்லை. அவைத்தலைவரிடம் சொன்னபோது நகல் தரப்படாதது தவறுதான்; அடுத்தமுறை சரி செய்யலாம் என்றார். இந்த மசோதா வுக்கு எதிராக ஐந்து மணிநேரம் தொடர்ச்சியாக முழக்கமிட்டோம். ஆனாலும் ஒரு நிமிடம்கூட மக்களவை ஒத்தி வைக்கப்படவில்லை.
மைய மண்டபம் என்பது இந்திய ஜனநாயகத்தின் இதயம் போன்றது. எந்த ஒரு உறுப்பினரும் தனி யாகவோ கூட்டாகவோ அங்கு நின்று கொண்டு குரல் கொடுத்தால் அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ அவை ஒத்தி வைக்கப்பட்ட அவர்கள் எழுப்பிய பிரச்சனை மீது விவாதிப்பது என்பது மரபு. அப்போதுதான் மணிப் பூர் போன்ற சின்னஞ்சிறு மாநிலத்தின் குரல்கூட கவனம் பெறும். ஆனால் அதையெல்லாம் மீறி எங்களது ஒட்டு மொத்த எதிர்கட்சிகளின் குரலுக்கு மதிப்பளிக்காமல் மக்களவை தொடர்ந்து நடந்தது. இந்த இடத்தில் தான் நமது குரல் – தொழிற்சங்கங்க ளின் குரல்கள் எதிர்காலத்தில் மிக மிக வலுவாக வேண்டியதன் அவசியம் எழுகிறது.
ரூ.6 லட்சம் கோடி
கடந்த வாரம் நிலைக்குழு கூட்டத் துக்காக தில்லி சென்றிருந்தேன். அப்போது ஒரு அதிகாரி கூறினார், ‘விற்பனைக்காக எல்லா துறைகளி லும் உள்ள நிறுவனங்களின் பட்டி யலை அரசு கேட்டுள்ளது. சுமார் 6 லட்சம் கோடி ரூபாய்க்கான விற்பனை திட்டம் தற்போது தயாராக உள்ளது. ஏர் இந்தியாவை விற்க முடிவு செய்து விட்டார்கள். வாங்க ஆளில்லை. அந்த நிறுவனம் ரூ.6 ஆயிரம் கோடி கடனில் உள்ளது. ரயில்வேயை தனியாரி டம் ஒப்படைக்கும் பணி துவக்கப்பட்டு விட்டது. பிஎஸ்என்எல் நிறுவனம் சீரழிக்கப்படுகிறது. பிஎஸ்என்எல் டவரை பயன்படுத்தும் ஜியோவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே 4ஜி கிடைத்து விட்டது. பிஎஸ்என்எல்க்கு இன்னும் 4ஜி கிடைக்கவில்லை.
கடைசியாக வங்கிகள் இணைப்பு மூலம் வரும் பாதிப்புகளை எதிர் கொள்ள நீங்கள் தயாராகி வருகிறீர் கள். இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்த ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்தபோது பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய என்னவோ செய்யப்போகிறார்கள் என்று எதிர் பார்த்தோம். ஆனால், அதில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடியை பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளாக அறிவித்து விட்டார்கள். இதன் மூலம் எதையும் மூடி மறைக்கும் தந்திரம் வெளிப்பட்டுள்ளது. வங்கித் துறையில் செய்யப்பட்டு வரும் மாற்றங்களை பாதிப்பு என்று கூறி னால், இதற்குமேல் நடக்கப் போவதை என்னவென்று கூறுவது? வங்கித்துறைமீது மிகப்பெரும் தாக்குதலுக்கு தயாராகி வருவதைப் பார்த்து நாம் அச்சமடையத் தேவை யில்லை. இதைவிட ஆயிரம் தாக்கு தல்களை சந்தித்துதான் வந்திருக்கி றோம். மக்களைத் திரட்டுவோம்; வலு வாக எதிர்ப்போம்! இவ்வாறு அவர் பேசினார்.