தருமபுரி, ஆக.27- இலக்கியம்பட்டி ஊராட்சியில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை, ஊராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தருமபுரி நகராட்சியையொட்டி உள்ளது இலக்கியம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சி தமிழகத்திலேயே பெரிய ஊராட்சிகளில் ஒன்றாகும். தருமபுரி நகரத்தின் ஒன்றாக இருக்கும் இவ்வூராட்சி மிகப்பரந்த விரிந்த பகுதி யாகும். இவ்வூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு நடுத்தர மக்கள், முறைசாரா தொழிலாளர்கள் அதிகம் வசிக் கின்றனர். இந்த ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாமல் புறக்கணிக்கப் பட்ட பகுதியாக உள்ளது. தெருக் களில் சாக்கடை நீர் வழிந் தோடும் நிலை, பல்வேறு பகுதி களில் குப்பைகள் தேங்கி மழை போல் குவிந்து கிடக்கிறது. பெரும்பகுதி வார்டுகளுக்கு ஒகே னக்கல் குடிநீர் வருவதில்லை. ஊராட்சி நிர்வாகமும் குடிநீர் விநியோ கிப்பதில்லை. இப்படி அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்து தராமல் ஊராட்சி நிர்வாகம் செயல் படாமல் முடங்கிக் கிடக்கிறது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.\
சுகாதார சீர்கேடு
குறிப்பாக இவ்ஊராட்சிக்குட் பட்ட பிடமனேரி மோகன்மேஸ்திரி தெரு, கணபதி காலனி, ஏரிக்கரை ரோடு உள்ளிட்ட பல்வேறு தெருக் களின் முனைகளில் குப்பைத் தொட்டி களில் குப்பை நிரம்பி மாதக்கணக்கில் அகற்றப்படாமல் உள்ளது. மேலும் பல தெருக்களில் சாக்கடை கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் தெரு களில் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் பிடமனேரி பகுதி மக்கள் நோய் தொற்று ஏற்பட்டு மலேரியா,டெங்கு, சிக்கன்குனியா போன்ற காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
தீராத குடிநீர் பிரச்சனை
இலக்கியம்பட்டி ஊராட்சியில் பல வார்டுகளுக்கு ஒகேனக்கல் குடிநீர் வருவதில்லை. மேலும் வீட்டு பயன் பாட்டிற்கு விநியோகிக்கப்படும் ஊராட்சி குடிநீரும் வழங்கப்படுவ தில்லை. இதனால் பெரும்பகுதி மக்கள் குடிநீரையும், வீட்டு பயன்பாட்டிற்கு தண்ணீரையும் ஒரு டிராக்டர் ரூ. ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். ஊராட்சி நிர்வா கத்திற்கு பொதுமக்கள் தண்ணீர் வரி செலுத்திய நிலையிலும் தண்ணீர் விநி யோகிப்பதில்லை.
குண்டும், குழியுமான சாலைகள்
பிடமனேரி மாரியம்மன் கோயில் தெரு, பட்டாளம்மன் கோயில் தெரு, தென்றல் நகர், வி.ஜெட்டிஅள்ளி ஆகிய தெருக்களின் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. பல ஆண்டுகளாக சாலைகள் செப்பனி டாமல் உள்ளது. மேலும் மழைக்காலங் களில் சாலைகளில் நீர்தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இத னால் வாகன ஓட்டிகள் சிரத்திற்குள் ளாகி வருகின்றனர். இலக்கியம்பட்டி ஊராட்சிக் குட்டபட்ட வெண்ணாம்பட்டி சாலையில் பெங்களூர்-சேலம் ரயில்பாதை உள்ளது. இங்கு ரயில்வே கேட் அமைக்கப்பட்டு ரயில் வரும் போது கேட்மூடப்படுகிறது. இதனால் மாணவர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வரு கின்றனர். இந்நிலையில் மேம்பாலம் கட்டப்படும் என அரசு அறிவித்தும் இதுவரை பணி தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோல் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள சாலை குறுகிய ரயில்வே பாலத்தை கடந்து பட்டாளம்மன் கோயில் ஏரியா வுக்கு செல்கிறது. எனவே மக்கள் தொகை பெருக்கத்தை கணக் கில் கொண்டு குறுகிய ரயில்பாலத்தை விரிவுபடுத்த வேண்டும்.
ஏரியை தூர்வாருக
பிடமனேரியில் மிகப்பெரிய ஏரி உள்ளது. தற்போது ஏரி சாக்கடை குள மாக மாறி உள்ளது. இந்த ஏரி அப் பகுதியின் நீராதாரத்தை உயர்த்தி வந்தது. இந்த ஏரி பல ஆண்டுகால மாக தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள கழிவு நீர் மற்றும் குப்பை நிரம்பி இந்த ஏரி சுகாதார சீர்கேடாக உள்ளது. அதே போல் பிடமனேரி, குள்ளனூர் ஏரி, இலக்கியம்பட்டி ஏரி வி.ஜெட்டி அள்ளிஏரி ஆகியவற்றை தூர்வாரி நீரா தாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இலக்கியம்பட்டி ஊராட்சி டி.என்.எச்.பி. பகுதியில் எரிவாயு தகனமேடை அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனை முதல் டி.என்.எச்.பி வரை உள்ள சாலைகளை அகலப் படுத்த வேண்டும். பிடமனேரி மாரியம்மன் கோவிலில் இருந்து ஏரிக் கரை வரை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். வெண்ணாம் பட்டி ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டப்பட வேண்டும். ஊராட்சி முழு வதும் குப்பை, சாக்கடை கால்வாய் சுத்தம் செய்ய வேண்டும். ஒகேனக்கல் குடிநீர், ஊராட்சி குடிநீர் தட்டுப்பாடு இன்றி அனைத்துப் பகுதியினருக்கும் கிடைக்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக, இலக்கியம்பட்டி ஊராட்சியில் அடிப்படை பிரச்ச னைகள் குறித்து இவ்வூராட்சிக்கு உட்பட்ட பிடமனேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.முத்து, ஒன்றியச் செயலாளர் என்.கந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர் கே.பூபதி மற்றும் மீனாட்சி கே.சுசிலா, வசந்தா, க.மாது ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதி மக்களிடம் குறை களை கேட்டறிந்தனர் என்பது குறிப் பிடத்தக்கதாகும்.
-ஜி.லெனின்