tamilnadu

img

பாரதியார் பல்கலை.க்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பிட்டை விரைந்து வழங்குக கோவை எம்.பி. தலைமையில் அடுத்த கட்ட இயக்கம் குறித்து ஆலோசனை

கோவை, செப்.7- பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை உடன டியாக வழங்க அரசு நிர்வாகத்திற்கு நிர் பந்தம் அளிப்பதற்காக அடுத்த கட்ட இயக் கம் குறித்த ஆலோசனை கூட்டம் வெள்ளி யன்று கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடை பெற்றது. கோவையில் பாரதியார் பல்கலைக் கழகம் அமைவதற்காக அங்குள்ள விவ சாயிகள் அரசு நிர்வாகத்தின் கோரிக் கையை ஏற்று நிலம் கொடுத்தார்கள். நிலத்திற்கான உரிய இழப்பீடு, பல்கலைக் கழகத்தில் வேலை என்கிற கோரிக்கை அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டது. ஆனால் மூன்று தலைமுறை கடந்தும் நிலம் அளித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தர வில்லை. இதனையடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப்பின ராக இருந்த பி.ஆர்.நடராஜன் தலைமை யில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் பாதிக் கப்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு இடைவிடாத களப்போராட்டம் மற்றும் சட்டப்போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக ஒரு சிறுபகுதி இழப்பீட்டை விவசாயிகள் பெற்றனர். மீதி தொகையை விரைவில் வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால், கடந்த ஐந்து வருடம் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இதற்கான எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாத நிலையில், விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. இதனையடுத்து நடை பெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றால் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு சேரவேண்டிய இழப்பீட்டை போராடிப் பெற்றுத்தருவோம் என வாக்குறுதி அளித் தது. தற்போது கோவை நாடாளுமன்ற உறுப்பினராக பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்ற பிறகு அளித்த வாக்குறுதியை நிறை வேற்றும் வகையில் பாதிக்கப்பட்ட விவ சாயிகள் பங்கேற்ற கூட்டம் வெள்ளியள்று நடைபெற்றது. வடவள்ளியைடுத்த கல்வீரம்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட் டத்திற்கு திமுக பொதுக்குழு உறுப்பி னர் சண்முகம் தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் பேசுகை யில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பக்கம் எப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நிற்கும், அந்த வகையில் வரு கிற திங்களன்று சென்னை தலைமை செயலகத்தில் பாரதியார் பல்கலைக் கழ கத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிக ளுக்கான இழப்பீடு  குறித்து கோரிக்கை மனு அளிப்பது. இதனைத்தொடர்ந்து அடுத்த கட்ட போராட்ட இயக்கங்கள் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு செல்வது எனவும், இதற்காக அனைத்து விவசாயிகளும் ஒன்றுபட்டு நின்று நமது உரிமையை வென்றெடுப்போம் என்றார். முன்னதாக, இக்கூட்டத்தில் திமுக பகுதி கழக செயலாளர் குப்புசாமி, தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன், செயலா ளர் வி.ஆர்.பழனிசாமி, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் ஆறுச்சாமி மற்றும் காளப்பன், வடவள்ளி மணி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட விவசாயி களும் ஏராளமானோர் பங்கேற்றனர்.