tamilnadu

img

போராட்டத்துக்கு தலைமை ஏற்றால் தற்காலிக பணி நீக்கமா?

திருப்பூர், ஜூலை 2 – தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலு வலர் சங்க மாநிலத்  தலைவராகவும், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப் பாளராகவும் செயல்பட்ட மு.சுப்பிர மணியத்தை பணி ஓய்வு பெறும் நாளில்  தற்காலிக பணி நீக்க உத்தரவு வழங் கியதைக் கண்டித்து திருப்பூரில் மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.பாஸ்கரன் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்ற இப்போராட்டத்தில் ஊரக  வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத்  தலைவர் ஞானசேகரன், சத்துணவு ஊழியர்  சங்க மாவட்டத் தலைவர் பாக்கியம், நெடுஞ் சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியம், பட்டுவளர்ச்சித்துறை ஊழியர் சங்க துணைத் தலைவர் நாகராஜன் ஆகியோர் போராட்டத்தை ஆதரித்துப் பேசினர். மாவட்டச் செயலாளர் ஆ.அம்சராஜ் கோரிக் கைகளை விளக்கிப் பேசினார். இதில் அரசு ஊழியர் சங்கத்தினர் திரளானோர் கலந்து  கொண்டு கண்டன முழக்கம் எழுப்பினர்.