மாதர் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான விமலா ரணதிவே மற்றும் சுதந்திர போராட்ட வீராங்கனை கேப்டன் லட்சுமி ஆகியோரின் நினைவுநாளையொட்டி கோவை மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூறு பேர் கண் தானம் செய்வதற்கான படிவங்களை பூர்த்தி செய்து கோவை மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகனிடம் வழங்கினர். இந்நிகழ்வில் மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ராஜலட்சுமி, சுதா ராமர், பங்கஜவல்லி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.