tamilnadu

img

விவசாயிகள் மனுகொடுக்கும் போராட்டம்

பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு

தருமபுரி, பிப்.18- இந்துஸ்தான் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க  எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி ஒன்றியம் சிவாடியில் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.  இப்பகுதி பெரும்பாலும் தலித் மக்களே வசித்துவருகின்றனர். இவர்கள் சிறு,குறு விவசாயிகள்.  அரை ஏக்கர் முதல் 2 ஏக்கர் வரை  வைத்துள்ளனர். இவர்களுக்கு இந் நிலத்தை வாழ்வாதாரமாகவும், ஆடு மாடு மேய்த்து வாழ்ந்து வருகின் றனர். இந்நிலையில் சிவாடி கிரா மத்தில் இந்துஸ்தான் பெட் ரோலியம் காரப்பரேசன் லிமி டெட் (எச்சிஎல்) ரூ.1813 கோடி  மதிப்பில் அமைக்கப்படவுள்ளது.  பெட்ரோலியம் சுத்திகரிப்பு  நிலையம் அமைக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது.  இங்கு சுத்திகரிப்பு  நிலையம் அமைக்கப்பட்டால்  சொந்த ஊரிலேயே இம்மக்கள்  அகதிகளாக மாற்றப்படுவார்கள்.  இவர்களின் வாழ்வாதாரம் பாதிக் கப்படும். இவர்கள் சொந்த நிலத்தில்  இருந்து வெளியேற்றும் முயற்சியை  அரசு கைவிடவேண்டும் என  வலியுறுத்தி விவசாயிகள் சங்கம்  மற்றும் சிவாடி கிராம மக்கள் தொடர்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட நிர் வாகம் சிவாடி மக்களின் நிலத்தை  கையகப்படுத்த நிர்ப்பந்தித்து  வருகிறது.  ஆனால் சிவாடி கிராம  மக்கள், அரசு புறம்போக்கு நிலத்தில்  பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம்  அமைக்க வலியுறுத்தி போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன்ஒருபகுதியாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் சிவாடி கிராம பொது மக்கள் சார்பில் மனுகொடுக்கும் போராட்டம் செவ்வாயன்று தருமபுரி மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. மாவட்ட தலை வர் கே.என்.மல்லையன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் டி.ரவீந்திரன், தமிழ் நாடு மலைவாழ் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, விவ சாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் சோ.அருச்சுணன் மற்றும் நிர்வாகிகள் எஸ்.எஸ்.சின்னராசு எம்.மணி, அந்தோனிராஜ்,,ஆர்.சின்னசாமி, சிவாடி ஊராட்சிமன்ற தலைவர் ஆர்.ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் பழனியம்மாள், பச்ச லிங்கம், கிளை நிர்வாகிகள் சிவ குரு,ரமேஷ்,வாசு உள்ளிட்டோர் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட்கட்சியின் மாவட்டச் செய லாளர் ஏ.குமார், ஒன்றியச் செய லாளர் கே.குப்புசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். 

விவசாய சங்க மாநில துணை தலைவர் டி.ரவீந்திரன் பேசு கையில், ஆந்திரா மாநிலம் விஜய வடாவில் இருந்து தருமபுரி வரை விடிபிஎல் திட்டத்தின் மூலம் சுமார்  700 கி.மீ., பைப் லைன் அமைத்து  சிவாடி கிராமத்தில் இந்துஸ்தான்  பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவெடுத் துள்ளனர். இத்திட்டத்துக்காக சிவாடியில் 123 ஏக்கர் நிலம் கைய கப்படுத்த உள்ளன. இந்த நிலம்  அனைத்தும் தலித் மக்களின் நில மாகும். இதனால் தலித்மக்களின் வாழ்வாதாரம், உரிமை பாதிக்கப் படும். விவசாயிகளின் விருப்பம்  இல்லாமல் நிலத்தை கையகப் படுத்த அரசு முயற்சித்து வருகிறது. குறுக்கு வழியில் அதிகாரிகள் ஏஜென்சி மூலம் நிலத்தை அபகரிக்க  முயல்கின்றனர். இதை கை விட்டு பெட்ரோலியம் சுத்தி கரிப்புநிலையத்தை அரசு புறம் போக்குநிலத்தில் அமைக்க  வேண்டும் என கேட்டுக்கொண் டார். மலைவாழ் மக்கள் சங்க மாநில  தலைவர் பி.டில்லிபாபு பேசுகை யில், தருமபுரி மாவட்டத்தில்  விவசாய நிலங்களை பாதிக்கிற  திட்டங்களையே அரசு கொண்டு  வருகிறது. குறிப்பாக கெயில், உயர் மின்கோபுரம், சிவாடி இந்துஸ் தான் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் போன்ற திட்டங்களை ஏற்படுத்த நினைக்கிறது. இத னால் விவசாயிகளும், விவ சாயமும் பாதிக்கப்படும்.  இவர்கள்  சொந்த மண்ணிலேயே அகதிகளாக் கப்படுவார்கள். எனவே இத் திட்டத்தை கைவிடவேண்டும். மேலும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடும் வரை விவசாயிகள் சங்கம் தொடர் போராட்டம் நடத்தும் என தெரி வித்தார். போராட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழியை சந்தித்து இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 98 மனுக் களை வழங்கினர். இப்போராட் டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.