tamilnadu

img

குடிமனைப் பட்டா கேட்டு மனுகொடுக்கும் போராட்டம்

உளுந்தூர்பேட்டை, அக். 11- இலவச வீட்டுமனை, குடிமனைப்பட்டா, மாதாந்திர ஓய்வூதியம் 3 ஆயிரமாக உயர்த்த  வேண்டும், 100 நாள் வேலையை ஆண்டிற்கு 200 நாட்களாக உயர்த்தி ரூ. 400  ஊதியம் வழங்கக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில்  விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் உளுந்தூர் பேட்டை, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்ன சேலம் ஆகிய இடங்களில் வட்டாட்சியர் அலு வலகங்களில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் எம்.சின்னதுரை கோரிக்கைகளை விளக்கி பேசினார். சங்கராபுரத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், வட்டச் செயலா ளர் வை.பழனி, சங்கத்தின் வட்டத் தலை வர் ஜி.மணிமாறன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரும், சின்னசேலத்தில் சிபிஎம் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, வட்டச் செயலாளர்  டி.மாரி முத்து, செயற்குழு உறுப்பினர் எஸ்.வேல்மா றன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரும், கள்ளக்குறிச்சியில் மாவட்டத் தலைவர் பி.சுப்பிரமணியன், சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ஏ.வி.ஸ்டாலின்மணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்  வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வீட்டு மனை இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனையும் புறம்போக்குகளின் குடி யிருக்கும் அனைவருக்கும் பட்டாவும் 60  வயது நிரம்பியுள்ள மற்றும் மாற்றுத்திற னாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரி  அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். திருவண்ணாமலையில் நடந்த ஆர்ப்பாட்  டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்  குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.