tamilnadu

ஈரோடு மற்றும் உதகை முக்கிய செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

உதகை, அக். 20- கூடலூரில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதே பகுதியைச் சோ்ந்த விஜய ரத்தினம் (எ) சுரேஷ் (22) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கூடலூா் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. முன்னதாக, கடந்த அக் டோபா் 16 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டிய விஜயரத்தினம் தலைமறைவானார். இதையடுத்து, கோவையில் பதுங்கி இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனா். இதனையடுத்து உதகை மகளிர் நீதி மன்றத்தில் விஜயரத்தினத்தை சனியன்று ஆஜா்படுத்தினா். அப்போது, இந்த  வழக்கை விசாரித்த மாவட்ட மகளிர் நீதி மன்ற நீதிபதி முரளிதரன் குற்றம்சாட்டப் பட்ட விஜயரத்தினத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அப ராதமும் விதித்து தீா்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

துண்டிக்கப்பட்ட பிஎஸ்என்எல் இணைப்பை பெற அழைப்பு

ஈரோடு, அக். 20- துண்டிக்கப்பட்ட தொலைபேசி இணைப்பை மீண்டும் பெற அணுகலாம் என பிஎஸ்என்எல் ஈரோடு மாவட்ட பொது மேலாளா் அறிவித்துள்ளார். இதுகுறித்து ஈரோடு பிஎஸ்என்எல் தொலைத்தொடா்பு மாவட்ட பொது மேலா ளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்  குறிப்பில் கூறியிருப்பதாவது, அக்டோபா்  10 ஆம் தேதி முதல் மறு இணைப்பு விழா நடைபெற்று வருகிறது. அதன்படி, துண்டிக்கப்பட்ட தொலைபேசி இணைப்பை மீண்டும் பெறலாம். இதற்காக குறிப்பிட்ட தொகை தள்ளுபடியாகும். நிர் மானக் கட்டணம் இல்லை. தொலைபேசி பழுதடைந்த காலத்துக்கு வாடகை தள்ளுபடி செய்யப்படும். துண்டிக்கப்பட்ட காலத்தில் இருந்து மறு இணைப்பு பெறும் காலம் வரை வாடகை தள்ளுபடி செய்யப்படும். மேலும், புதிய குறைந்த கட்டணத் திட்டங்களில் விருப்பமான திட்டத்தைத் தோ்வு செய்து பயன்பெறலாம். கூடுதல் விவரத்துக்கு அருகில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையம் அல்லது தொலைபேசி நிலையத்தைத் தொடா்பு  கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள் ளது.

 கோவை அருகே மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை

கோவை, அக். 20- கோவை அருகே மைலேரிபாளையம் பகுதியில் அரை சவரன் நகைக்காக மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மளிகைக்கடைக்கு தீவைத்து தப்பி ஓடிய கொலையாளிகளை காவல்துறையின்ர் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயபால்(60). தேவகி (55) தம்பதியினர், கடந்த மூன்று ஆண்டுகளாக கோவை மைலேரிபாளையம் அருகே உள்ள தொப்பம் பாளையம் சாலையில் மளிகை கடை நடத்தி, கடையின் ஒரு பகுதியில் வசித்தும் வந்தனர். இந்நிலையில், கடந்த மூன்று  தினங்களுக்கு முன் மூதாட்டியின் கணவர் ஜெயபால் தனது சொந்த பணி நிமித்தம் காரணமாக திருவள்ளு வர் சென்றுள்ளார். இதனால் மூதாட்டி தேவகி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையறிந்த மர்ம நபர்கள், மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அவர் காதில் அணிந்தி ருந்த அரை பவுன் நகையை பறித்துச் சென்றனர். மேலும், தடயங்களை அழிக்க முயன்ற மர்ம நபர்கள் சடலத்தை சுற்றி யும் மிளகாய் பொடி தூவியதுடன் மளிகை கடைக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். நள்ளிரவில் மளிகை கடையில் தீப்பற்றி எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த தீய ணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, தேவகி கழுத்தறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். பின்னர் செட்டிபாளையம் காவல்நிலை யத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தடயங்களை சேகரித்த காவல்துறையினர் நகைக்காக தான் கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணங்கள் ஏதும் இருக்கின்றதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.