tamilnadu

பொள்ளாச்சி மற்றும் உதகை முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் குறித்து வலைதளத்தில் தவறான பதிவு

கோவையில் ஒருவர் கைது

கோவை, மார்ச் 20- கொரோனா வைரஸ் குறித்து தவறான வீடியோ வெளி யிட்டு வதந்திகளை பரப்பியதாக கோவையில் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த வர் ஹீலர் பாஸ்கர். இவர் சமீபகாலமாக கொரோனா வைரஸ் குறித்து தொடர்ச்சியாக தனது கருத்தை சமூக  ஊடகங்களில் பதிவிட்டு வந்துள்ளார். அதில், கொரோனா  வைரஸ் தொடர்பாக தவறான பதிவையே வெளியிட்டு வந்தார்.  இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து வதந் திகள் கிளப்பியதாக ஹீலர் பாஸ்கர் மீது கோவை மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் ரமேஷ் குமார் புகார் அளித்தார். இதனடிப்படையில் பாஸ்கர் மீது மூன்று பிரிவின் கீழ்  வழக்கு பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார் வெள்ளி யன்று கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்ற காவ லில் அடைக்கப்பட்டார்.

கொரோனா அச்சுறுத்தல்   ஊரடங்கு உத்தரவுக்கு பிரச்சாரம்

வியாபாரிகள் சங்கம்

பொள்ளாச்சி, மார்ச் 20-  வால்பாறை பகுதியில் வருகின்ற மார்ச் 22 ஆம் தேதி யன்று கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக ஊர டங்கு உத்தரவிற்கு ஆதரவு கோரி, வியாபாரிகள் சங்கத் தின் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள ப்பட்டது . மார்ச் 22 ஆம் தேதியன்று கொரோனா வைரஸ் தடுக்கும்  முன்னெச்சரிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்குகிற்கு, இந்திய பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இதன் தொடர்ச் சியாக வெள்ளியன்று காலை வால்பாறை நகர்புறப்ப குதிகளில் கொரோனா  ஊரடங்கு உத்தரவை நடைமுறை படுத்துவது குறித்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில்  தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சிறுகுறு  வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சாரமானது வால்பாறை காந்தி சிலை மற்றும்  ஸ்டோன்மோர் எஸ்டேட், பேருந்து நிலையம் உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில் ஆம்னி வாகனங்கள் மூலமாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.  இப்பிரச்சாரத்திற்கு வால்பாறை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் ஜெபராஜ்  தலைமை வகித்தார். இதில்  சுதாகர், பாபு, மணி, ராஜா உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பி னர் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

 

கொரோனா வைரஸ் எதிரொலி : சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் வியாபாரிகள் கடும் பாதிப்பு

உதகை, மார்ச் 20- கொரோனா வைரஸ் காரண மாக, உதகையில் உள்ள தாவரவி யல் பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்ததால் அப்பகுதி  வியாபாரிகள் கடும் பாதிப்புக்குள் ளாகினர். நீலகிரி மாவட்டத்திற்கு தின மும் வெளி நாடுகள் மற்றும் வெளி  மாநிலங்களில் இருந்து பல ஆயி ரக்கணக்கான மக்கள் வந்துச் செல் வது வழக்கம். குறிப்பாக, உதகை யில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை வாடிக்கை யாக கொண்டுள்ளனர். உத கைக்கு மார்ச் மாதம் முதல் மே  மாதம் வரை சுற்றுலா பயணிகள் வருகை பல மடங்கு அதிகரிக்கும். இதுபோன்ற சமயங்களில் உத கையில் நடைபாதைகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் நுழைவு வாயில் பகுதிகளில் பழம், தொப்பி, பொம்மை, காய்கறிகள் போன்ற பொருட்களை சிலர் வியாபாரம் செய்து வந்தனர். இந்த சிறு தொழில் மூலம் வியாபா ரிகளுக்கு கணிசமான லாபம் கிடைத்து வந்தது. இந்நிலையில், இம்மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை மிக அதிகமாக இருக்கும் என வியா பாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அனைத்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்க ளும் மூடப்பட்டன. மேலும், மார்ச்  31ஆம் தேதி வரை உதகைக்கு சுற்றுலா பயணிகள் யாரும்  வர வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளன.இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப் படுகிறது. மேலும், சுற்றுலா பய ணிகள் யாரும் செல்லாத நிலை யில், இதனை சுற்றி கடை வைத் துள்ளவர்களில் 90 சதவிகி தம் பேர் கடைகளை மூடிவிட்ட னர். இதில், பெரும்பாலானவர்கள் பழங்கள், காய்கறிகள், சோளம், பொம்மைகள் விற்பனை செய்ப வர்களே அதிகமாக உள்ளன. சுற்றுலா பயணிகள் வராத நிலை யில் விற்பனைக்காக வாங்கி வைத்திருந்த பல ஆயிரம் மதிப் புள்ள பழங்கள் மற்றும் காய்கறி கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள் ளதால், கடும் பாதிப்பு ஏற்படும் என வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும், விரைவில் கொரோனா வைரசை முற்றிலுமாக ஒழித்து சுற்றுலா பயணிகள் உதகைக்கு வழக்கம்போல் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்:  20 லட்சம் கிலோ தேயிலைத்தூள் தேக்கம்

உதகை, மார்ச் 20- கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக குன்னூரில் ரூ.14 கோடி மதிப்பிலான 20 லட்சம் கிலோ தேயிலைத்தூள் தேக்கமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள் குன்னூர், கோவை, கொச்சின் போன்ற  பகுதிகளில் உள்ள ஏல மையங்கள் மூலம் வெளி மாநி லங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதியாகி வருகி றது. இந்நிலையில், கொரோனா வைரஸ் எதிரொலியாக தேயிலைத்தூளை கொண்டு செல்ல முடியாது என்பதால் வெளி நாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந் தும் வர்த்தகர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை. இதன்  காரணமாக குன்னூரில் ரூ.20 லட்சம் கிலோ தேயிலைத் தூள் தேக்கமடைந்துள்ளதாக தேயிலை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தேயிலை வர்த்தகர் ஒருவர் கூறுகையில், தேயிலை விவசாயத்தை நம்பி மாவட்டத்தில் பெரும்பா லான தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு தயாரிக்கப்ப டும் தேயிலைத்தூள் குன்னூரில் உள்ள ஏல மையத்தில்  ஏலம் விடப்பட்டு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுக ளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இம்மாத ஏலம் குன்னூரில் நிறுத்தப்பட்டது. இதனால், தேயிலைத்தூள் ஏலம் போகாமல் ரூ.14 கோடி மதிப்புள்ள சுமார் 20 லட்சம் கிலோ தேயிலைத்தூள் தேக்கம் அடைந்துள்ளது. மேலும், நீலகிரி தேயிலை ஆலை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

லாரி விபத்து

ஈரோடு, மார்ச் 20-  ஈரோடு மாவட்டம் தாள வாடி மலைப்பகுதியில்  நடைபெற்று வரும் சாலை  பணிக்கு வியாழனன்று  சென்ற டிப்பர் லாரி சிக்க ஹள்ளி பள்ளம் அருகே  சென்ற போது லாரியில்  விபத்துக்குள்ளாகி கவிழ்ந் தது. இதனைத்தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் லாரி யில் சிக்கிய ஓட்டுநரை  மீட்டு தாளவாடி அரசு  ஆரம்ப சுகாதார நிலையத் திற்கு அனுப்பி வைத்தனர்.  இதில் லாரி ஓட்டுநர்  லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இவ்வி பத்து குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.