திருப்பூரில் கை கழுவ தண்ணீர் எங்கே?
குடிநீர் வழங்க சிபிஎம் கோரிக்கை
திருப்பூர், மார்ச் 18 – உலகஅளவில் ரோனா வைரஸ் தாக்கம் இருக்கும் நிலை யில், இதன் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தி பொது மக்களைக் காப்பாற்ற திருப்பூர் மாநகரில் நாள்தோறும் குடிநீர் விநி யோகம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன், தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் ஆகியோர் புதனன்று திருப்பூர் மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில் கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் ஒவ்வொரு மணி நேரமும் கைகளைக் கழுவ வேண்டும் என்று அரசுத் தரப்பில் விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் திருப்பூர் மாநகரின் பெரும்பாலான வார்டுகளில் 10 முதல் 15 நாட்க ளுக்கு ஒருமுறை, 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சம் 15 – 25 குடங்கள் அளவு குடிநீரே கிடைக்கும். இந்நிலையில் அரசின் அறிவிப்பை எப்படி அமலாக் குவது என்பதை மாநகராட்சி நிர்வாகம் விளக்க வேண் டும். அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு குழந்தைகள் வீடுகளில் உள்ள சூழலில் முறையான, தொடர்ச்சியான குடிநீர் விநியோகத்தை மாநகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். இது குறித்து புகார் அளித்தால் மண்டல அதிகாரிகள் எந்த நடவ டிக்கையும் எடுப்பதில்லை. எனவே கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் வகையில் போர்க்கால அடிப்படையில் குடிநீர் விநியோகத்தைக் குறைந்தபட்சம் இரண்டு நாட்க ளுக்கு ஒரு முறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
உதகை: சுற்றுலா பயணிகள் தங்களின் வருகையை தவிர்த்திடுக
உதகை, மார்ச் 18- நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களுக்கு பிற மாவட்டம் மற்றும் மாநி லத்தைச் சேந்தவர்கள் தங்களின் வரு கையை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கேட்டுக்கொண் டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்து உள்ள நிலையில் சுற்றுலா தலங் கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒன் றான நீலகிரியிலும் பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் படி நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தி லுள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மார்ச் 17 முதல் மார்ச் 31 வரை மூட உத்த ரவு பிறப்பிக்கப்படுகிறது. அண்டை மாநி லங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதால், வெளிமாநி லங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். சுற்றுலா பயணிகளின் வருகையை கட்டுப் படுத்தவும், சோதனைச்சாவடிகளில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் தங்கும் விடுதிகளையும் மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணி கள் உடனடியாக காலி செய்யவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து, கிருமிநாசினி பற்றாகுறை உள்ள மக்கள் வீட்டிலேயே தயாரித்து கொள்ளலாம். அதற்கு, 320 கிராம் பிளீச்சிங் பவுடருடன் ஒரு லிட்டர் தண்ணீரை சேர்த்தால், மேல் பகுதியில் நுரை கலந்த தண்ணீர் காணப்படும். அதை 9 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து வீடுகள் சுற்றுப்பு றங்களில் தெளிக்கலாம் அல்லது சோப்பை பயன்படுத்தி 20 முதல் 30 வினாடிகள் கைகளை சுத்தமாக கழுவலாம் என தெரிவித் துள்ளார். மேலும், நீலகிரியில் செயல்படும் சர்வதேச பள்ளிகளில் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் படிப்பதால், பள்ளிகளை மாவட்ட மருத்துவ அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி
அரசு பேருந்துகள் இயக்கம் குறைப்பு
கோவை, மார்ச் 18 - கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுப்போக் குவரத்தான அரசு பேருந்துகளின் இயக்கமானது பெரு மளவு குறைந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகெங்கும் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக் கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை, திரையரங்கம், வணிகவளாகங்கள் மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று நோய் என்பதால் மக்கள் கூட்டம் அதிகம் சேராமல் இருப்பதற்கான நடவடிக்கையின் ஒருபகுதியாக இத் தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந் நிலையில் பொதுப்போக்குவரத்தை அதிகப்படுத்தி பயணி களின் போக்குவரத்தை எளிமைப்படுத்தி கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக பேருந்துகளின் எண்ணிக் கையை குறைக்கும் நடவடிக்கையில் அரசு போக்குவரத் துக்கழக கோவை கோட்டம் ஈடுபட்டு வருவது அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கோட்டத்தில் 1018 அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன. இதில் 130 நகர பேருந்துகளும், 39 வெளியூர் செல்லும் பேருந்துகளும் தற்காலிமாக நிறுத்தப்பட் டுள்ளன. மேலும் கோவையிலிருந்து கேரளாவிற்கு 30 அரசு பேருந்துகள் சென்று வந்தன. இந்நிலையில் நேற்று முதல் 15 பேருந்துகள் மட்டுமே கேரளாவிற்கு சென்று வருகின் றன. கொரோனா பாதிப்பின் காரணமாக மார்ச் 31 ஆம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்படாது என அரசு போக்கு வரத்துக்கழக கோவை கோட்டத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக குறைந்த அளவு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்கிற அரசின் பல்வேறு விழிப்பு ணர்வு நடவடிக்கைகள் பேருந்து இயக்கத்தில் லாப நஷ்ட கணக்கை பார்க்கிறதோ என்கிற ஐயம் எழுந்துள்ளது. இந்நேரத்தில் பொதுப்போக்குவரத்தை அதிகப்படுத்தி எளிமையான நெரிசல் இல்லாத பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.