மதுக்கு அடிமை- இளைஞர் தற்கொலை
ஈரோடு, மார்ச் 3- ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே வடவள் ளி பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (35). இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. சுப்ரமணிக்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி மது அருந்த பணம் கேட்டு தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது. இதனால் மன வேதனையடைந்த சுப்ரமணி ராஜன்நகரில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு திங்களன்று சென்ற நிலையில் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண் டார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லாரி மோதி இளைஞர் பலி
உதகை, மார்ச் 3- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் வசிப்பவர் கந்தசாமி. இவ ரது மகன் லட்சுமணன் (22).இவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள பில்லிகம்பைப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். இவரை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு கோத்த கிரி அரசு மருத்துவம னைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்த னர். இவ்விபத்து குறித்து கோத்தகிரி காவல் துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.