tamilnadu

img

திருப்பூரில் மருத்துவர்கள் தொடர் போராட்டம் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் நேரில் ஆதரவு

திருப்பூர், அக். 31 – நியாயமான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழகம் தழுவிய அள வில் அரசு மருத்துவர்கள் மேற் கொண்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பூரில் போராட்டத்தில் ஈடு பட்டுள்ள மருத்துவர்களை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வா கிகள் நேரில் சந்தித்துப் பேசி ஆத ரவு தெரிவித்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு, பிற மாநிலங்க ளுக்கு இணையான ஊதியம், இடமாற்ற கலந்தாய்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்.25ஆம் தேதி முதல் தமி ழகத்தில் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஏழாவது நாளாக அக். 31ஆம் தேதி இந்த போராட்டம் தொடர்ந்து வருகி றது.

மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு

லைமை மருத்துவமனை வளா கத்தில் வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் கள் தனி ஷாமியானா பந்தல் அமைத்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலை யில் வியாழனன்று காலை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். கோபாலகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் நேரில் மருத்துவர் களை சந்தித்துப் பேசினர். அப்போது தமிழ்நாடு அரசு மருத்துவர் கூட்டமைப்பு சார்பில் மருத்துவர் சுதர்சனம், மருத்துவர் கிருபானந்தம், மருத்துவர் கார்த் திகை, மருத்துவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து தெரிவித் தனர். போராட்டம் தொடங்கி ஒரு வார காலம் ஆகியும் அரசு குறைந்த பட்சம் பேச்சுவார்த்தை நடத்தக் கூட முன்வராமல், அடக்கு முறையை ஏவி விடப் பார்க்கிறது. 

மிரட்டல் நடவடிக்கை

இதற்கிடையே திருப்பூர் மருத் துவர்கள் இருவரை கொல்லி மலைக்கும், கடலூருக்கும் இட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித் துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற் பட்ட மருத்துவர்களுக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற அடக்குமுறைகளால் ஏற்கெனவே போராட்டத்தில் பங்கேற்காமல் இருந்தவர்களும், தற்போது போராட்டத்திற்கு வந்துள்ளனர். ஆரம்பத்தில் 80 சதவிகிதம் பேர் பங்கேற்றனர். இப்போது நூறு சதவிகிதம் பேர் பங்கேற்புடன் போராட்டம் நடை பெறுகிறது. ஊதிய உயர்வு குறித்து நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டபோது, மருத்துவர் களின் ஊதியம் உயர்நீதிமன்ற குமாஸ்தாவின் ஊதியத்தை விட குறைவாக இருப்பதைக் கண்டு ஊதிய உயர்வின் நியாயத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. எங்கள் போராட்டத்தால் நோயா ளிகளுக்கு, பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவசர, உயிர்க் காப்பு சிகிச்சைகள் அளித்து வருகிறோம். 

வலுப்பெறும் போராட்டம்

மருத்துவர்களின் உணர்வு களைப் புரிந்து கொண்டு பேச்சு வார்த்தை நடத்த அரசு முன்வர வேண்டும். அடக்குமுறையை ஏவுவதால், தற்போது திருப்பூர் மாவட்டத்தில் மாவட்டத் தலை மையிடம் மட்டுமின்றி தாராபுரம், உடுமலை, காங்கேயம், பல்லடம் என இதர அரசு மருத்துவமனை மருத்துவர்களும் இந்த போராட் டத்துக்கு வருகின்றனர். அரசின் நடவடிக்கை ஏமாற்றமும், வேத னையும் அளிக்கிறது. இந்தியா வில் சுகாதாரத் துறையில் தமிழ கம் முதலிடத்தில் இருப்பதற்கு மருத்துவர்களின் பணியும் முக் கிய காரணம். ஆனால் அரசு வஞ் சிப்பது சரியல்ல! இப்போது போராட்டம் நடக் கும் நிலையில் சாமியானா பந் தலை அகற்றிவிட்டு வெளியே போய் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என மிரட் டுகின்றனர். யாருக்கும் தொந்த ரவு இல்லாமல் நாங்கள் போரா டுகிறோம், உறுதியுடன் போராட் டம் தொடரும் என்று மருத்துவர் கள் தெரிவித்தனர். மருத்துவர்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது என்று தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள், இந்த போராட்டத் துக்கு அனைத்து வகையிலும் ஆதரவு தெரிவிப்பதாகவும் உறுதி யளித்தனர். மருத்துவர்கள் (கை தட்டி) இதற்கு வரவேற்புத் தெரி வித்தனர்.