tamilnadu

img

தென்மாவட்டங்களுக்கு ரயில் சேவை - கோவையில் தொடர் போராட்டம்

பி.ஆர்.நடராஜன் எம்.பி. தலைமையிலான போராட்டக்குழு அறிவிப்பு

கோவை, அக்.14- கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நிறுத்தப்பட்ட ரயில் சேவைகளை மீண்டும் துவக்க வலியுறுத்தியும், ரயில்வே துறை பரிந்துரை செய்த ரயில் களை இயக்க வலியுறுத்தியும் தொடர் போராட்டங்களை மேற் கொள்வது என கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் தலைமையிலான போராட் டக்குழுவில் முடிவெடுக்கப்பட் டுள்ளது.  கோவை காந்திபுரத்திலுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் ரயில்வே போராட்டக் குழுவின் சார்பில் அனைத்து கட்சிகள் பங்கேற்ற கூட்டம் த.பெ.தி.க பொதுச் செய லாளர் கு.ராமகிருட்டிணன் தலை மையில் திங்களன்று நடை பெற்றது. இதில் திமுக நிர்வாகி நாச்சிமுத்து, மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார், சேதுபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் யு.கே.சிவஞானம், என்.ஜாகீர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி தங்கவேல்,  காங்கிரஸ் கட்சியின் ஜெயபால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுசி. கலையரசன், தமிழ்நாடு வியா பாரிகள் சங்கத்தின் சார்பில் மாணிக்கம், ஆதிதமிழர் கட்சி யின் ரவிக்குமார், புரட்சிகர இளை ஞர் முன்னணி மலரவன், மக்கள் அதிகாரம் மூர்த்தி, தமிழ்புலிகள் இளவேனில் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் நிர்வாகி கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்திற்கு பின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் கூறுகை யில், கோவை, பொள்ளாச்சி, பழனி செல்லும் தற்காலிக பயணி கள் ரயில் சேவை நிரந்திரமாக் கப்படும் என்று அறிவித்திருப் பதை இந்த போராட்டக்குழு வர வேற்கிறது. அதேநேரத்தில் கடந்த காலத்தில்  கோவை - பொள்ளாச்சி இடையேயான அகல ரயில் பாதை பணிகள் கார ணமாக, கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக் கப்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட் டன. இந்நிலையில் பணிகள் நிறை வடைந்து அத்தடத்தில் ரயில் சேவை துவங்கிய நிலையிலும், தென்மாவட்டங்களுக்கான ரயில் கள் இயக்கப்படவில்லை. கோவை - ராமேஸ்வரம், கோவை -  தூத்துக்குடி, கோவை - மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக் கான ரயில் சேவைகளை மீண்டும் துவக்க வேண்டும். மேலும், கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள கோவை- பெங்களூர் இரவு நேர ரயில் சேவையை ரயில்வே துறை பரிந்துரை செய்துள்ளது. இதனை யும்  இயக்குவதற்கான நடவடிக் கையை ரயில்வே துறை துரி தப்படுத்த வேண்டும் என இந்த  போராட்டக்குழு வலியுறுத்தியுள் ளது. இதனையொட்டி அரசு மற்றும் ரயில்வேதுறையின் கவனத்தை ஈர்க்கும் வகையில்  முதல்கட்ட மாக வருகிற அக்.23 ஆம் தேதி யன்று கோவை ரயில் நிலை யத்தில் பொதுமக்களிடம் கையெ ழுத்து இயக்கத்தை நடத்தி ரயில்வே துறைக்கு அனுப்புவது, கோரிக்கைகள் நிறைவேற்றப் படாவிட்டால் அடுத்தடுத்து ஆர்ப் பாட்டம், ரயில் மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.