சென்னை ஏப்.14-
கொரோனா வைரஸ் தொற்று தாகத்தை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் கடந்த 21 நாட்களாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. ரயில், போக்குவரத்து, விமானம் பேருந்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா தாகம் அதிகமாகி கொண்டே வருவதால் ஊரடங்கு மேலும் 17 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பயணிகள் ரயில் சேவை ரத்தும் மே 3ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது.