கோவை, மே 19- சிறுவர், சிறுமியர்கள் பட்டம் விடுவதை தவிர்க்க வேண் டும். மீறினால் பெற்றோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசா மணி எச்சரித்துள்ளார். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசா மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள் ளதாவது: கோவை மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நக ராட்சி, மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் கடந்த சில நாட்க ளாக பட்டம் விட்டு விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பல தரப்பில் இருந்தும் புகார்கள் வரப்பெற்றுள்ளன. இவ்வாறு பட்டம் விட்டு விளையா டுவதால், பட்டம் அறுந்து அருகில் உள்ள உயரழுத்த மின்பா தையில் சிக்கி விடுகிறது.
இதன் காரணமாக மின் தடை ஏற்படுத்துவதுடன், மின்சார வாரியத்திற்கு இது பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது. அத்துடன், சாலையில் செல்லும்போது பயணிகள் மீது பட்டத்தின் கயிறு இறுக்கி மரணம் வரை கொண்டு செல்லும் ஆபத்து உள்ளது. எனவே, மின் தடை மற்றும் மின் விபத்து ஏற்படாமல் இருக்கவும், உயிரிழப்பு போன்ற பாதிப்புகளை தவிர்க்க வும், பட்டம் விட்டு விளையாடுவதை சிறுவர்கள், சிறுமி யர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். சிறுவர்கள் பட்டம் விடாமல் அவர்களின் பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அதையும் மீறி சிறுவர்கள் பட்டம் விட்டால் அவர்களின் பெற்றோர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.