tamilnadu

உணவு பாதுகாப்பு சட்டத்தினை மீறுவோர்க்கு அபராதம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

உதகை, பிப். 2- உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்ட விதிகளை மீறும் உணவு வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நீல கிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு தர  நிர்ணய சட்டம் 2006 மற்றும் 2011 விதிகளை மீறுவோர் மீது உணவு பாதுகாப்பு துறையின் நேரடி கள ஆய்வுக்கு பின்னால்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு  ரூபாய் 12 லட்சத்திற்கு கீழ் கொள்முதல், விற் பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு பதிவு சான்று பெற்றவர்கள், சிறு மற்றும் குறு தயாரிப்பாளர்கள் ஆகியோர் களின் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறுவது முதல்முறை கண்டறியப்பட்டால் அபராதமாக ரூ. 3 ஆயிரம், இரண்டாம் முறை என்றால் ரூ.6 ஆயிரம், மூன்றாம் முறை என் றால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்ப டும். மூன்று முறைக்கு மேல் குற்றம் செய் தால் உணவு வணிகரின் உணவு பாதுகாப்பு பதிவு சான்று ரத்து செய்யப்பட்டு மேல் நட வடிக்கை தொடரப்படும்.  மேலும், தமிழக அரசால் தடை செய் யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை கண்டறியப்பட்டால் ரூ.5 ஆயிரம் முதல்  ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு பதிவு சான்று ரத்து செய்யப்படும். மேலும் செய்தித்தாளில் உணவு பரிமாறுதல், பொட்டலம் இடுதல் கண்டறியப்பட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப் பட்டு பதிவுச் சான்று ரத்து செய்யப்படும். மேலும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை விற்பனை செய்வோர் மற்றும் திருமண மண்டபம், சமுதாய நிகழ்ச்சிக ளில் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தால் அபராதம் விதிக் கப்படும். மேலும், பொதுமக்கள் உணவுப் பொருட்கள் தொடர்பான தங்களது புகார்களை 9444042322 என்ற எண்ணில்  புகார் தெரிவிக்கலாம். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விதித்த அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் கடைகளின் பதிவு அல்லது உரிமம் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.