districts

img

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்காத அலுவலர்களுக்கு நோட்டீஸ் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

செங்கல்பட்டு, நவ.17- மாதந்தோறும் நடைபெறும் விவ சாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்காத துறை சார்ந்த அலு வலர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்ட விவ சாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர்ஆ.ரா.ராகுல்நாத் தலை மையில் வியாழனன்று (நவ17) நடை பெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்துறை சார்ந்த கால்நடை பரா மரிப்புத் துறை, மத்திய கூட்டுறவு வங்கி, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், மின்சாரத் துறை, காவல்துறை, வனத்துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலை, தமிழ்நாடு போக்குவரத்து கழகம், நுகர்பொருள் வாணிப கழகம், கோட்டாட்சியர்கள்,வட்டாட்சியர்கள், வேளாண் உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலு வலர்கள்கலந்து கொள்ள வேண்டும் ஆனால் மாதந்தோறும் நடை பெறும் இக்கூட்டத்தில் பெருவாரி யான அலுவலர்கள் கலந்து கொள்ள வில்லை மாறாக அந்த அலுவல கத்தில் உள்ள யாராவது ஒரு வரை அனுப்பி விடுவதால் விவசாயி களின் புகார்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படுவதில்லைஎன குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்நிலையில் வியாழன்று நடை பெற்ற கூட்டத்திலும்  பல்வேறு துறை களைச்சார்ந்த உயர் அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததை கண்ட விவசாயிகள் துறைசார்ந்த உயர் அலுவலர்கள் தொடர்ந்து ஏன் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என கேள்விஎழுப்பினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சி யர் கூட்டத்தில் தொடர்ந்து கூட்டத்தில்கலந்து கொள்ளாத அலு வலர்களிடம் விளக்கம் கேட்க உத்தர விட்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர்அரிகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கே.வாசுதேவன் ஆகியோர்,  பாலாற்றில் ஈசூர்வள்ளி புரம் இடையே கட்டப்பட்ட தடுப்பணை யின் கரைகள் சேதமடைந்துள்ளதை உடனடியாகசீரமைக்க வேண்டும், பாண்டூர் ஏரியில் இருந்து செல்லும் உபரிநீர் கால்வாயில் ஆக்கிரமிப்பு உள்ளதை உடனடியாக சீரமைக்க வேண்டும், மதுராந்தகம் ஏரியில் படிந்துள்ள வண்டல் மண் முழுவதும் தூர்வார வேண்டும், தற்போது ஏரி யில்பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் விவசாயம் செய்ய முடியாத 28 கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.  இதற்கு பதில் அளித்து பேசிய மாவட்ட ஆட்சியர், நீர்வரத்து கால்வாய்களில்உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும், சீமை கருவேலமரங்கள் அகற்றப்படும்,  மாவட்டத்தில் அமைக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக சுமார் 25 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்வதால் தாங்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் நேரடியாக தெரிவிக்கலாம் என்றார்.