உடுமலை, அக். 12- அரசு அனுமதி வழங்காத இடங்களில் இருந்து வண்டல் மண் சட்ட விரோதமாக எடுப்பதை வருவாய் துறை கண்டு கொள்ளா மல் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தள்ளது. தமிழக அரசு கடந்த மாதம் உடுமலை வருவாய் கோட்டத் திற்குட்பட்ட திருமூர்த்தி அணை, உப்பாறு அணை, கரிசல் குளம், வளையபாளையம் குளம் உள் ளிட்ட அரசுக்குச் சொந்தமான பகு திகளில் விவசாய தேவைகளுக்கு என்று வண்டல் மண் எடுக்க அனு மதி வழங்கியது. இதன் படி திரு மூர்த்தி அணையில் 50600 கன மீட்டரும், உப்பாறு அணையில் 29579 கனமீட்டரும், பெரிய குளத் தில் 99000 கனமீட்டரும், கரிசல் குளத்தில் 18750 கனமீட்டரும் , வளையபாளையம் குளத்தில் 7900 கனமீட்டர் வண்டல் மட்டுமே, அதுவும் விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், அரசு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்காத பள்ளபாளையம் செங்குளத்தில் இருந்து கடந்த சில நாட்களாக மண் எடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக அதிகாரிகளை கேட்ட போது, இப்பகுதியில் உள்ள குளங்களில் உள்ள கரைகளை பலப்படுத்த இந்த குளங்களில் இருந்து மண் எடுத்து பயன்படுத்து கிறோம் என்றார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக செங்குளத் தில் இருந்து எடுக்கும் மண் இப்ப குதியில் உள்ள வீட்டு மனைகளுக் கும், தனியார் நிலங்களில் அதிக விலைக்கு சட்ட விரோதமாக விற் பனை செய்து வருகிறார்கள். இப்படி அரசின் விதிகளை காற் றில் பறக்க விட்டு, சட்ட விரோத மாக மண் எடுப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வருவாய் துறை அதிகாரிகள் மறுக்கின்ற னர். அதேசமயம் மண்பானை செய்யும் தொழிலாளர்கள் தங்க ளின் தொழிலுக்கு மண் எடுக்க அனுமதி கேட்டு பல மாதங்களாக காத்திருந்தும் இன்று வரை அனு மதி வழங்கப்படவில்லை என அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதனை அரசும், மாவட்ட நிர்வா கமும் கவனிக்குமா!
(கே.மகாதேவன்)