பட்டாம்ப்பூச்சிகள் இயற்கை நிகழ்வுகளை முன்கூட்டியே எடுத்து ரைக்கும் வழிகாட்டி. இயற்கையை அதன் தன்மை மாறாமல் பாதுகாப் பதில் பட்டாம் பூச்சிகளின் பங்கு இன்றியமையாதது. மலைக்காடுக ளிலும், அடர்ந்த வனங்களிலும் மட்டுமின்றி பிற பகுதிகளிலும் அரியவகை தாவரங்கள் மற்றும் மலர்களின் பரவலுக்கு முக்கிய கார ணம் இந்த பட்டாம்ப்பூச்சிகளின் மகரந்தச் சேர்க்கையே. இந்த சின்னஞ்சிறிய பட்டாம் பூச்சிகள் நிலத்தில் வாழும் மிகப் பெரும் உயிரினமான காட்டு யானைக் கூட்டங்களைப்போல் ஆண்டுக்கு இருமுறை பருவ சூழ லுக்கு ஏற்றார் போல் இடப் பெயர்ச்சி செய்யும் இயல்புடை யது. தென்மேற்குப் பருவமழை யின் தொடக்க காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் இருந்து லட்சக்கணக்கில் பறக்கத் துவங்கும் இவை கிழக்குத் தொடர்ச்சி மலைக்காடுகளைச் சென்றடையும். இதே போல் இனவிருத்திக்குப் பின்னர் அங் கிருந்து வடகிழக்குப் பருவ மழையின் தொடக்க காலத்தில் மீண்டும் புதிய பூச்சிகளின் கூட்ட மாகக் கிழக்குத் தொடர்ச்சி மலைக் காட்டில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளை வந்தடையும். இந்த இடப்பெயர்ச்சி பல்லாயிரக்கணக்கான ஆண்டுக ளாகத் தவறாமல் தொடரும் ஒரு இயற்கை சார்ந்த தொடர் நிகழ்வு. ஜூன் மாதம் இறுதியில் துவங்கி ஜூலை மாதம் துவக்கத்தில் இவற்றின் இடப்பெயர்ச்சி உச்ச கட்டத்தில் இருப்பது வழக்கம். ஆனால் இம்முறை இதுவரை பட்டாம்பூச்சிகளின் வலசை துவங் கவில்லை.
ஆண்டுதோறும் வழக்கமாக கோடையில் ஆயிரம் மீட்டர் உய ரத்திற்கும் கீழே இருக்கும் இலை யுதிர் காடுகள் மட்டுமே காய்ந்தி ருக்கும். ஆயிரம் மீட்டருக்கு மேலே இருக்கும் சோலைக்காடுகள் ஈரப் பதத்தை தக்க வைத்திருக்கும். அங்கிருக்கும் நீர் நிலைகளில் தண்ணீர் இருக்கும். யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அங்கு இடம் பெயர்வதன் மூலம் உயிர் பிழைக்கும். ஆனால் இம்முறை சோலைக்காடுகளும் பெருமளவு வறண்டு விட்டன. கீழே சமவெளிக் காடுகளிலும் புற்கள், மலர்ச்செடி கள் காய்ந்து கிடக்கின்றன. மேலும் தற்போது கோடையில் பெய்ய வேண்டிய மழையும் மலைசார்ந்த பகுதிகளில் பொய்த்துப்போய் வழக்கமான பருவமழையும் தள்ளிப்போவதால் பட்டாம் பூச்சி களின் இடப்பெயர்ச்சியும் தாமத மாகியுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் இருந்த பல வகை பட்டாம்ப்பூச்சிகள் பருவ நிலை மாற்றத்தால் கடந்த சில ஆண்டுகளாக காணக்கிடைக்க வில்லை என வருந்தும் பட்டாம் பூச்சி ஆர்வலர்களுக்கு, இவ்வாண்டு உணவுக்காகவும், இனவிருத்திக் காகவும் வழக்கமாக வலசை செல் லும் வண்ணத்துப்பூச்சிகள் பருவ மழை தாமதமாவதால் இயற்கை யான இடப்பெயர்வைச் செய்ய இயலாமல் இருப்பது கவலைய டைய வைத்துள்ளது. ஆண்டுதோ றும் பட்டாம்பூச்சிகளின் நகர்வு களை “பட்டர்பிளைஹாட் ஸ்பாட்” என்று பூச்சியியல் துறை வல்லு னர்களால் போற்றப்படும். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தில் உள்ள கல்லார் பகுதி யில் தற்போது நடத்தப்பட்ட வல்லு னர் குழு ஆய்வில், வழக்கமான பட்டாம் பூச்சிகளின் வலசை இன் னமும் துவங்கவில்லை என கண் டறியப்பட்டுள்ளது. ஆனாலும், விரைவில் பருவமழை தொடங்கும், இதனால் பசுமை திரும்ப தாமத மானாலும் மீண்டும் பட்டாம் பூச்சிகளின் இடப்பெயர்ச்சி நடக் கும் என தெரிவிக்கின்றனர். ஏதோ ஒரு மூலையில் ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிற கசைப்பு மற்றொரு இடத்தில் நிகழவுள்ள மிகப்பெரிய இயற் கைப் பேரிடரை சுட்டிக்காட்டும் என்பதால் இதனை “வண்ணத்து பூச்சி விளைவு” என்பார்கள். தற் போது இவற்றின் வலசை தள்ளிப் போவது இயற்கையின் சமன் பாடு மாறி வருவதையே சுட்டிக் காட்டுவதாக உள்ளது.
- இரா.சரவணபாபு