tamilnadu

img

குமரி மாவட்டத்தில் தொடரும் பருவமழை திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்

நாகர்கோவில், ஜூன்.7- தென்மேற்கு பருவமழை  காரணமாக கடந்த ஒரு வார  காலமாக குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து  மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் முக்கிய நீரா தாரங்களான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்து வருவதால் அணை களின் நீர்வரத்து அதிகரித் துள்ளது. அதையொட்டி திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா தலமான திற்ப ரப்பு அருவியில் கனமழை  காரணமாக வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிர பரணி ஆற்றின் கரையோர  பகுதியில் வசிக்கும் மக்க ளுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் ஏற்க னவே கோவிட்19 தொற்று தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங் கால் சுற்றுலா தலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அரு வியின் அழகை கண்டு ரசிக்க  பொதுமக்களும், சுற்றுலா பயணிகளுமின்றி வெறிச் சோடி காணப்படுகிறது.