weather

img

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி - மீனவர்களுக்கு எச்சரிக்கை 

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கவுள்ளது . இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக் கடலில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருக்கிறது . இதன் காரணமாக ஒடிசா, பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்காளம், ஆந்திரா உள்பட வட மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்  என்று தெரிவிக்கப்படுகிறது .

மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதால் வங்கக் கடல் பகுதியில் பலத்த கடல் காற்று வீசக்கூடும் . அதனால் , மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக வங்கக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  எச்சரித்துள்ளது.