நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியக்குழு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், காவேரி ஆர் எஸ் பேருந்து நிறுத்தம் அருகில், உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியத் தலைவர் ஆர்.ரமணி, மாவட்டச் செயலாளர் ஆர்.அலமேலு, ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெயந்தி, வசந்தி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.