tamilnadu

img

உள்ளாட்சி தேர்தலுக்கான முழு ஏற்பாடுகள் தயார் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி பேட்டி

கோவை, டிச.14 -  உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங் களில் 84 இடங்கள் பதட்டமானவை  என கண்டறியப்பட்டு இதற்குட்பட்ட 214 வாக்கு சாவடிகளுக்கும் கூடுதல் காவல் துறையினர் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட இருக்கின்றது. கோவை மாவட்டத்தை பொருத்தவரையில் உள்ளாட்சி தேர்தலுக் கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அள வில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி  தெரிவித் தார். உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மாவட்ட ஆட்சியர் இராசமணி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் சனி யன்று நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் என். ஆர்.முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.  இதனைத்தொடர்ந்து, ஆட்சியர் இராசா மணி  செய்தியாளர்களை சந்தித்தார். அப் போது அவர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் 2447 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான  தேர்தல் நடைபெறுகின்றது.  இதற்காக 1520 வாக்கு சாவடிகள்  அமைக்கப் பட்டு இருக்கிறது. இரண்டு கட்டமாக நடை பெறும் இந்த தேர்தலுக்கு 12336 பேர் தேர்தல் அலுவலர்களாக  நியமிக்கப்பட்டுள்ளனர்.  ஞாயிறன்று முதல் கட்டமாகவும்,  21ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் வாக்கு பதவிக்கு முதல் நாள் மூன்றாம் கட்டமாகவும் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட  இருக்கின்றது.  வாக்கு பதிவு முழுமையாக நடை பெறுவதை உறுதி செய்ய 119 மண்டல குழுக் கள் அமைக்கப்பட்டுள்ளது.  விதிமுறைகள்  மீறப்படுவதை  கண்காணிக்க இரு ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு பறக்கும்  படை  அமைக் கப்பட்டுள்ளது.  ஊரக தேர்தல் என்பதால் ஊரக பகுதி களுக்கு மட்டுமே நன்னடைத்தை விதிகள் பொருத்தும். பதட்டமான இடங்கள் என 84 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வி டங்களுக்கான 214 வாக்குசாவடிகள்  கண்டறி யப்பட்டுள்ளது.  இங்கு கூடுதல் காவல் துறை யினர் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட இருக்கின்றது.  24 மணி நேர மும் தேர்தல் குறித்த புகார்கள் தெரி விக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங் கப்பட்டுள்ளது.  உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவது தொடர்பாக புகார்கள் கோவை மாவட்டத்தில் எதுவுமில்லை. அப்படி எதாவது தகவல் கிடைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித் தார். ஊரக தேர்தல் நடைபெறும் இடங்க ளில் உள்ள 16 சோதனை சாவடிகளில் கூடு தல் கண்காணிப்பு செலுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.  வாக்கு பதிவிற்கு தேவைக்கு அதி கமாகவே ஓட்டு பெட்டிகள் இருக்கின்றது என வும் ஆட்சியர் இராசாமணி  தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சுஜித்குமார், மாவட்ட வரு வாய் அலுவலர் இராமதுரைமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.