கோவை, ஜூலை 15– கோவை, ராமகிருஷ்ணாபுரத்தில் அனுமதியற்ற வாரச்சந்தையால் போக்குவரத்து நெரிசல், சுகாதார சீர்கேடுஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக் குள்ளாவதால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் சந்தையை அகற்றிடநடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அனைத்துக்கட்சியினர் சார்பில் திங்களன்று மனு அளித்தனர். கோவை - சத்தி சாலையில் உள்ள கணபதி ராம கிருஷ்ணாபுரம் பகுதியில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. இந்த வார சந்தையில் புத்தர் வீதி, சாரதாதேவி வீதி, விவேகானந்தர் வீதி போன்ற 10-க்கும் மேற்பட்ட வீதிகளில் சாலையை ஆக்கிர மித்து வாகனங்களை நிறுத்துவதால் அங்கு வசிப்பவர் கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதனை ஆய்வு செய்து சந்தை கடைகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அனைத்துக்கட்சியினர் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த லஷ்மி கிருஷ்ணகுமார் கூறுகையில், இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சாலை ஓரங்களிலும் கடை அமைப்பதால் சத்தி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், இங்கு வாரச்சந்தை கடை போடுபவர்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், குடியிருப்பு பகுதி யின் திறந்தவெளியிலேயே இயற்கை உபாதைகள் கழித்து செல்கின்றனர். மேலும் மீதமாகும் காய்கறி களை தெருவிலும், சாக்கடையிலும் கொட்டிச் செல் கின்றனர். இதனால் இப்பகுதி முழுவதும் சுகாதாரச் சீர்கேடாய் உள்ளது. இப்பகுதியில் வாரச்சந்தை நடத்த அனுமதி இல்லையென தகவல் அறியும் உரி மைச்சட்டத்தின் மூலம் மாநகராட்சி தகவல் அளித் துள்ளது. ஆனால் சிலர் சட்டத்திற்குப் புறம்பாகக் கடைகள் அமைக்க அனுமதித்து வசூல் செய்து வரு கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித் தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆகவே, மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு வந்து சந்தை கடைகளை அகற்ற உரிய நடவடிக் கைகள் எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.