திருப்பூர், மே 2 -திருப்பூர் மாவட்டத்தில், 133ஆவது மே தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.ஊத்துக்குளி பாரதிநகர் பகுதியில் சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து மே தின கொடியேற்ற நிகழ்ச்சியை நடத்தினர். ஊத்துக்குளி ஆர்.எஸ்.பகுதியில் சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கம் சார்பிலும், மின்வாரிய அலுவலகம் அருகில் சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பிலும் செங்கொடி ஏற்றி மே தின விழா எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது.ஊத்துக்குளி சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பிலும் செங்கொடி ஏற்றி மே தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாக்களில் சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.குமார், சிஐடியு நிர்வாகிகள் சிவசாமி, பழனிச்சாமி, பெரியசாமி, மகேந்திரன் உள்பட நிர்வாகிகள், பனியன், சுமைப்பணி, மின்வாரியம், கட்டுமான தொழிலாளர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
ரயில்வே கூட்செட் தொழிலாளர்கள்
திருப்பூர் ரயில்வே கூட்செட் வளாகத்தில் நடைபெற்ற சிஐடியு மே தினக் கொடியேற்று விழாவுக்கு சங்கத் தலைவர் எஸ்.எம்.பழனிச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் டி.ஆறுமுகம் வரவேற்றார். இதில் சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம்.சந்திரன் பங்கேற்று செங்கொடியை ஏற்றி வைத்தார். சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ராஜகோபால், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், வழக்கறிஞர் எஸ்.பொன்ராம் உள்ளிட்டோர் பங்கேற்று மே தின உரையாற்றினர்.ஆண்டுதோறும் மே தின விழாவின்போது சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு குழுரீதியாக செந்துண்டு வழங்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் தொழிலாளர்களுக்கு செந்துண்டுகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.கனகராஜ், மாவட்டப் பொருளாளர் எம்.முருகேசன், கூட்செட் பொருளாளர் என்.விஷ்ணுராஜ், துணைத் தலைவர் எம்.ராமர், கமிட்டி உறுப்பினர் ஆர்.கந்தசாமி உள்பட சுமார் இருநூறு தொழிலாளர்கள் பங்கேற்றனர். முடிவில் துணைச் செயலாளர் பி.ஈஸ்வரன் நன்றி கூறினார்.
அவிநாசி
அவிநாசியில் சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிஐடியு சங்கத்தின் ஆர்.வேலுச்சாமி தலைமை வகித்தார். ஏஐடியுசி பி.பொன்னுச்சாமி வரவேற்புரை வழங்கினார். சிஐடியு எம்.ராஜகோபால், ஏஐடியுசி எஸ்.செல்வராஜ் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் சிஐடியு பி.முத்துச்சாமி, எஸ்.வெங்கடாசலம், ஏ.ஈஸ்வரமூர்த்தி, ஏ.சண்முகம், ஏஐடியுசி கே. எம். இஷாக், ஏ.ஜி.சண்முகம், வீ.கோபால், என்.செல்வராஜ் உள்ளிட்ட திராளனோர் கலந்து கொண்டனர்.