கோவை, ஆக.16 - பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ ரசீது மற்றும் மருத்துவப்படி வழங்கிட வலியுறுத்தி அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர்கள் சங்கம் வருகிற ஆக. 19ல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொது செயலர் கே.ஜி.ஜெயராஜ் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்துள் ளதாவது: கடந்த 18 மாதங்களாக பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி மற்றும் மருத்துவ ரசீ துகளை கிட்டத்தட்ட பிஎஸ்என்எல் நிர்வாகம் மறுத்துவிட்டது. புற்று நோய் இருதய சிகிச்சை மற்றும் சிறுநீரகக் கோளாறுகளுக்கு சிகிச்சை எடுத்து வரும் ஓய்வூதியர்கள் இந்த ரசீதுகள் கிடைக்காததால் தங்களின் சாதாரண பென்சனை வைத்து கொண்டு செலவழிக்க முடியாமல் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வரு கின்றனர்.
இதுகுறித்து தொலைத் தொடர்பு அமைச்சர் கவனத்திற்கும், இரு முறை பிரதமர் கவனத்திற்கும் கொண்டு சென்றும் தற்போது வரை எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. இந்தப் பெரும் தொற்று காலத்தில் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் பிஎஸ்என்எல் நிர்வாகம் இந்த மருத்துவ வசதிகளை வெட்டிச் சுருக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், அதே நேரம் பிஎஸ்என் எல் நிர்வாகம் பணியிலிருக்கும் ஊழி யர்களுக்கும், அதிகாரிகளுக்கும் செப் டம்பர் 2019 வரை உள்ள மருத்துவ ரசீதுகளை வழங்கியுள்ளது. இந்த பாகுபாடானது ஓய்வூதியர்களுக்கு மத்தியில் கடும் அதிருப்தியை ஏற் படுத்தி உள்ளது. \
எனவே, பிஎஸ்என் எல் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ வசதிகளை மறுக்கும் நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக மருத்துவப் படி வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி யும் வரும் ஆக.19 ஆம் தேதியன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள் ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.