பி.ஆர்.நடராஜன் எம்.பி., கண்டனம்
கோவை, மே. 8 - மத்திய அரசின் நிறுவனமான தமிழக பிஎஸ்என்எல் நிறுவனம் ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. தனியார் துறைக்கு முன்னுதார ணமாக திகழ வேண்டிய அரசுத் துறை நிறுவனம் முரணாக செயல் படுவதை ஏற்க முடியாது என்று கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது, தமிழக பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாள ர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மிக குறைந்த ஊதி யமே வழங்கப்படுகிறது. இது நிரந் தர தொழிலாளர்களுக்கு வழங் கப்படும் ஊதியத்தில் ஐந்தில் ஒரு பகுதி கூட இல்லை என்பது வேத னையாகும். இந்த ஒப்பந்த தொழி லாளர்களின் தொடர்ச்சியான இயக்கங்களுக்கு பிறகு தற்போது தான் இபிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட சமூக நல திட்டங்கள் அமலாக்கப் பட்டு வருகின்றன. ஆனாலும் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்க ளுக்கு கடந்த பத்து மாத காலத் திற்கும் மேல் ஊதியம் வழங்கப்பட வில்லை. இதற்காக அந்த தொழி லாளர்கள் பலமுறை முறையிட் டும், பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய பின்னரும் கூட தற்போது வரை ஊதியம் தரப்பட வில்லை.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் கொரோனா தொற்று நோய் கார ணமாக மத்திய அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலை யில், தமிழக பிஎஸ்என்எல் நிர்வா கம், அனைத்து மாவட்டங்களிலும் ஊதியம் இல்லாத நிலையிலும் தற்போது பணியாற்றிக் கொண் டுள்ள ஒப்பந்த ஊழியர்களை பணி யில் இருந்து விரட்ட முயற்சிக் கின்றது. ஊரடங்கு காலத்தில் எந்த தொழிலாளியையும் வேலையை விட்டு நிறுத்தக் கூடாது என்று மத்திய அரசு தனியார் நிறுவனங் களுக்கு உத்தரவிடுகிறது. ஆனால், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை புதிய முறையிலான டெண்டர் என்று கூறி அவர்களை பணி நீக்கம் செய்ய முயற்சிப்பது முரணாக உள்ளது.
தனியார் துறைக்கு முன் உதா ரணமாக திகழ வேண்டிய அரசு நிறுவனமே ஊழியர்களை பணி நீக்க முயற்சி மேற்கொள்வது தனி யார் துறையின் அத்துமீறல் நட வடிக்கையை கேள்வி கேட்பதற் கான தார்மீக உரிமையை இழந்து விடுவோம் என்பதைகூட உணரா தது வேதனையாக உள்ளது. மேலும், சுமார் ஒரு வருட காலமாக ஊதியத்தை தராமல் இருப்பது டன், அவர்களை பணியில் இருந்து விரட்டுவது என்பது மனிதாபிமா னமுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள முடியாதது. புதிய டெண்டர் முறை யில், டெண்டர் எடுத்தவருக்கு இந்த ஊரடங்கு காலத்திலேயே, அவர் SECURITY DEPOSIT கட்டினாலும் சரி, கட்டாவிட்டா லும் சரி என்று டெண்டர் வழங்கப் படுகிறது. டெண்டர் எடுத்தவரோ அல்லது அவரது நிர்வாகியோ எடுத்த பணிகளுக்கு ஆட்களை நியமிக்கக்கூட இயலாத வண்ணம் ஊரடங்கு இருக்கும் போதும், வேண்டுமென்றே நிர் வாகம் அவர்களுக்கு டெண்டர் கொடுப்பதன் நோக்கம் என்ன? ஊரடங்கு காலத்தில், எதை வேண்டுமானாலும் செய்து கொள் ளலாம், யாரும் கேட்க முடியாது என்ற மனிதாபிமானமற்ற நட வடிக்கையை ஏற்க முடியாது. சமூக தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக போராட இயலாத சூழலை பயன்படுத்தி, பரிதாபகரமாக வாழ்க்கையை நடத்திவரும் ஒப்பந்த தொழி லாளர்களை வேலை செய்த நாட்களுக்கு ஊதியமும் தரா மல், அவர்களை பணியில் இருந்து விரட்டுவதற்காக தமிழக பிஎஸ் என்எல் நிர்வாகம் முயற்சி செய் வதை வேடிக்கை பார்க்க முடி யாது. ஒப்பந்த தொழிலாளர்கள் எவரையும் பணி நீக்கம் செய்யக் கூடாது. அவர்களுக்கு நிலுவை யில் உள்ள ஊதியத்தை உடன டியாக வழங்கிட வேண்டும். பாதிக் கப்பட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யும் வகையில் அறிவிக்கப் பட்டுள்ள புதிய டெண்டர் முறை யினை ரத்து செய்து பழைய நிலையே தொடர வேண்டும் என தமிழக பிஎஸ்என்எல் நிர்வா கத்தை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பி.ஆர்.நடராஜன் எம்.பி., கூறியுள்ளார்.