தஞ்சாவூர், ஆக.20- உள்ளாட்சி பிரதிநிதிகளின் சொந்த முன்விரோதம் காரணமாக நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களை பணி நீக்க முயற்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்கு பவர்கள் மற்றும் துப்புரவுப் பணி யாளர் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பி னரும், பேராவூரணி ஒன்றியச் செயலாள ருமான சித்தாதிக்காடு எஸ்.கருப்பை யன், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்ச ருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். கோரிக்கை மனுவில், பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் 10.05.2000 க்கு பின், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களாக பல வருடங்களாக, குறைந்த மாத ஊதியமாக ரூ 250 மட் டும் பெற்றுக் கொண்டு, பணியாற்றி வரு கிறோம். தற்போது புதிதாக பதவிக்கு வந்துள்ள ஊராட்சி பிரதிநிதிகள், சொந்த முன்விரோதம் காரணமாகவும், வெறுப் பின் காரணமாகவும், பணியாளர்களை நீக்க முயற்சித்து வருகின்றனர். எனவே, உள்ளாட்சி பிரதிநிதிகளின் விருப்பு, வெறுப்பின் காரணமாக, காலங் காலமாக குறைந்த ஊதியத்தில் பணி யாற்றி வரும், பணியாளர்களை பணியில் இருந்து நீக்கி விடாமல், தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என கூறப்பட்டுள் ளது. இம்மனுவின் நகல் தஞ்சாவூர் ஆட்சி யர் உள்ளிட்டோருக்கும் அனுப்பப் பட்டுள்ளது.