கோவை, பிப். 6 – மோட்டார் வாகன சட்டத்தின் படி அதிகப்படியான அபராதம் விதித்து மனஉளைச்சல் ஏற்ப டுத்திய காவல்துறையை கண் டித்து ஆட்டோ ஓட்டுனர் மின் கம்பியை பிடித்ததால் மரணம் அடைந்தார். ஆட்டோ ஓட்டுனர் ஹரிச்ச்சந்திரன் மறைவுக்கு அஞ் சலி செலுத்தி அனைத்து ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் கோவையில் வியாழ னன்று நடைபெற்றது. மத்திய அரசு கொண்டுவந் துள்ள சாலைபோக்குவரத்து மசோதாவை காரணம் காட்டி காவல்துறையின் அநியாய அபரா தம், மிரட்டல் போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்செய லுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதனை எதிர்த்து ஆட்டோ உள் ளிட்ட மோட்டார் வாகன தொழிற் சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் மதுரையில் ஆட்டோ ஓட்டுனர் ஹரிசந்திரன் என்பவர் அநியாய அபராதம் விதித்ததால் மனம் உடைந்து மின்கம்பியை பிடித் ததால் அகால மரணமடைந்தார். ஹரிசந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கோவையில் வியாழனன்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்ட மைப்பு தொழிலாளர்கள் பங் கேற்ற அஞ்சலி கூட்டம் நடை பெற்றது. காந்திபுரம் திருவள்ளு வர் பேருந்து நிலையம் அருகே பெரியார் படிப்பகம் முன்பாக நடைபெற்ற கூட்டத்தில் நூற்றுக் கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர் கள் பங்கேற்றனர். முன்னதாக மத்திய அரசின் அடாவடித்தனம், காவல்துறையினரின் அத்துமீறல் ஆகியவற்றை கண்டித்து சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் செயலாளரும், அனைத்து ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் கூட்டுகமிட்டி தலைவருமான பி.கே. சுகுமாறன் தலைமை யேற்று கண்டன உரையாற்றி னார். இதில், சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட தலைவர் இர.செல்வம், எப்ஐடியு முகமது உசேன், ஏஐடியுசி சிவசண்முகம், எஸ்டிடியு ரகூப் நிஷார், எல்பிஎப் வணங்காமுடி, எம்எல்எப் ஷாஜ கான், எம்டிஎஸ் பாபு, உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரையாற் றினர். இதனைத்தொடர்ந்து மறைந்த ஹரிசந்திரன் உருவப்ப டத்திற்கு ஆட்டோ தொழிலா ளர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.