உடுமலை, நவ. 25- நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர் களுக்கு சம்பளம் வழங்கக் கோரி மடத்து குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாய தொழிலாளர்கள் திங்களன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மடத்துகுளம் தாலுகாவிற்குட்பட்ட சோழமாதேவி,வேடபட்டி, கடத்தூர் மற் றும் அரியநாச்சிபாளையம் ஊராட்சிகளில் நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்க ளாக சம்பளம் வழங்கப்பட வில்லை. மேலும் இப்பகுதியில் நூறு நாள் வேலைக்கு சட்டப் படியான வேலை மற்றும் சம்பளம் வழங்கப் படவில்லை. ஆகவே உடனடியாக சட்டபடி யான சம்பளம் ரூ.229 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மடத்துகுளம் தாலுகா செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கி னார், மாவட்ட தலைவர் சி.சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம், சங்கத் தின் நிர்வாகிகள் தெண்டபாணி, ஈஸ்வரன், சண்முகம், ராதகிருஷ்ணன், பாலசுப்பிரம ணியண் மற்றும் சிஐடியு சங்கத்தின் ஆர்.வி. வடிவேல், விவசாய சங்கத்தின் கார்த்திகே யன் உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது.