districts

img

நூறு நாள் வேலை தொழிலாளர்கள் மீது விஷ வண்டுகள் தாக்குதல்

கும்பகோணம் டிச.7- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை  வீரமாங்குடி கிராமத்தில் வெள்ளிக்கிழமை தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அப்பகுதி மக்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். புதர்களாக மண்டிக் கிடந்த செடிகளை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்ட நேரத்தில் திடீரென விஷ வண்டு கதண்டு பூச்சிகள் தாக்கி கடித்தன. இதில் சின்ன தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி சாந்தி(40), கோவிந்தசாமி மனைவி ராஜம்மாள், கந்தசாமி கோயில் தெரு சீமான் மனைவி கோவிந்தம்மாள், செம் மங்குடியை சார்ந்த வைத்தியநாதன் மகள் ஞானம் ஆகியோருக்கு வீர மாங்குடி சுகாதார மையத்தில் முதலு தவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் சாந்தி மற்றும் ராஜம்மாள் உடலில் அதிக இடங்களில் வண்டுகள் கடித்ததால் மேல் சிகிச்சைக்காக தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுதொடர்பாக பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டது, ஆனால் தீயணைப்புத் துறை யினர் சம்பவ இடத்தில் வந்து பார்த்து பூச்சிகள் கலைந்து சுற்றித் திரிகின்றன. தற்போது அவைகளை ஒன்றும் செய்ய முடியாது என்றும், மாலை  அவை அனைத்தும் ஒன்று கூடும் போது கட்டுப்படுத்தலாம் என்றும் கூறியதைத் தொடர்ந்து வீரமாங்குடி கிராமம் கண் காணிக்கப்பட்டு வருகிறது.  இதனால் அக்கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அச்சத்து டன் இருந்தனர். அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் விஷ வண்டுகளை முழுமையாக அழித்திட நவீன உத்திகளை கையாண்டு வரு கின்றனர்.